உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படகு 274 கட்டும் துறை ஒன்று ஏற்பட்டிருக்கிறது. நார்வேயிலிருந்து வந்த இயந்திரக் கருவிகளைக்கொண்டு இங்கு படகுகள் கட்டப் பெறுகின்றன. மீன்பிடித் துறையில் இங்கு மீனவர்களுக்குப் பயிற்சி கொடுக்கப்பெறுகிறது. ஜப்பான் போர்க் காலத்தில் (1942-45) இது ஒரு கேந்திரமான இடமாயிற்று. இந்தியக் கப்பற்படை இங்கு ஒரு தளம் அமைத்தது. கடற்படை வீரர் மூவாயிரம்பேர் இங்கு தங்கினர். கப்பல்களை இங்கிருந்து 12 மைலில் நிறுத்தி ரோந்து சுற்றி வந்தனர். இங்கிருந்து சிங்கப்பூரைப் பிடிக்கத் திட்ட மிடப்பட்டிருக்கிறது. கடற்படையினருக்காக இங்கு அமைக்கப்பட்டது. இரயில்வேக்கு ஒரு மருத்துவமனையும் இங்குள்ள சிறு துறைமுகத்தில் கப்பலில் தென் வேண்டிய நிலக்கரி வரவழைக்கப் படுகிறது. மண்டபம் கேம்ப் : இலங்கைக்குச் செல்லுபவர்கள் தங்குவதற்காக லங்கை அரசாங்கத்தார் ஒரு சிறு நகரத்தை ஏற்படுத் தினர். மண்டபம் கேம்ப் இரயில் நிலையத்துக்கு அருகே இது இருக்கிறது. இடபோது அது நமது நாட்டு அரசின் உடைமையாக இருந்து வருகிறது. இந்தியாவிலிருந்து செல்லும் தோட்டத் தொழி லாளராலும் ஏனைய இந்தியப் பயணிகளாலும்தான் லங்கையில் தொத்து நோய்கள் பரவுவதாக இலங்கை அரசினர் கருதினர். அதனால் இலங்கைக்குச் செல்லுப வர்களை எட்டுநாள்முதல் பதினைந்து நாள்வரை இங்கு