281 வரும் உடன் கட்டை ஏறினர். இந்நிகழ்ச்சியின் காலம் கி.பி.1720 தங்கச்சி மடத்தைக் காட்டைய தேவரும், அக்காள் மடத்தை சிவகுமார முத்து விஜய ரகுநாத தேவரும் கட்டினர். . 500 மீனவர்கள் இவ்வூரில் உள்ளனர். தென் மேற்குப் பருவக்காற்று அடிக்கும்போது. நெல்லை மாவட்டத்தின் கரையில் மீன் பிடிக்க இயலாது எனவே சூலை முதல் அக்டோபர்வரை 5,000 மீனவர் இங்கு மீன் பிடிக்க வருகிறார்கள். மீன் விற்பனைக்கு இவ்வூரில் குளிர்சாதன வசதி இருக்கிறது. வெற்றிலை, வாழைககாய், முருங்கை இங்கு பயிரிடப் பட்டுப் பெரிய அளவில் வியாபாரம் ஆகின்றன. பெரிய தேவாலயம் கட்டப்பட்டிருக்கிறது. தங்கச்சி மடத்திற்கு அருகே வில்லூண்டி என்னும் சிற்றூர் இருக்கிறது. இதன் சரியான பெயர் வில்லூன்றி இராமர் வில் ஊன்றிச் சீதையின் தாகத்தைத் தணித் தாக நம்பிக்கை. கடற்கரையில் நீருக்குள்ளிலிருந்து உப்பில்லாத நல்ல தண்ணீர் பீறிட்டுக் கொண்டு வருகிறது. இந்த ஊரணி St. Theras of the Child Jesus church க்கு அருகே இருக்கிறது. இங்கு 3,000 கத்தோலிக்கர் வாழ்கின்றனர். ஏகாந்தராமர் கோவில், இராமர் அமைதியாக இருந்து மந்திராலோசனை நடத்திய இடம் ஆதலால் அவ்வாறு பெயர்பெற்றது. இங்கு ஒருவரும் நல்ல மாடுகள் வைத் துக்கொள்வதில்லை, ஏர் உழுவதில்லை, உரல் இடிப்பதில்லை. கே காட்டுப்பிள்ளையார் கோவிலும், இவ்வூர் அருகே இருக்கிறது. கோதண்டராமர் கோவில் அரு விபீடணர் சரண் அடைந்ததாகக் கூறுவர். இ-18
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/283
Appearance