உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 வாலாந்தருவை: கடலோரமாகக் கழிவுநீரும் மழை நீரும் தேங்கி நிற்கும் பகுதிகள் 'தருவை' எனப்படும். திருநெல்வேலி மாவட்டம் சாத்தான் குளம் பகுதியில் பல தருவைகள் உள்ளன. அநுமன் லிங்கம் கொண்டுவரத் தாமதித்ததால், அவனுடைய வாலை இராமர் அறுத்தார் என்றும் அறுந்த வால் விழுந்த தருவை, வாலறுந்ததருவை எனப் பெயர் பெற்றதாயும் கூறுகிறார்கள். பாய் நெசவாலும், 1944-இல் ஏற்பட்ட ஆகாய விமான நிலையத்தாலும் இவ்வூர் புகழ் பெற்றிருக்கிறது. வேதாளம் : விக்கிரமாதித்தன் கதையுடன் இந்த ஊர் தொடர்பு படுத்திக் கூறப்படுகிறது. மேலைநாட்டார் இவ்வூரை வெடலை எனக் குறிப்பிட்டுள்ளனர். மண்டபத்திலிருந்து 5கி.மீ. தொலைவிலும் பாம்பனிலிருந்து 11 கி.மீ. தொலைவிலும் இவ்வூர் இருக்கிறது. பம்பாய், பஸ்ரா துறைமுகங்களுடன் இவ்வூரார் வியாபாரம் செய்கி றார்கள். - பனை வெல்ல உற்பத்தி, விதையில்லாக் கத்திரிக்காய் பயிரிடுவது, பாய் மிடைவது, பதநீர் வியாபாரம் செய்வது - இவை இவ்வூராரின் தொழில்கள்.இங்கிருந்து 60 மைல் தூரம்வரை 60 அடி ஆழத்தில் முத்தும் பவள மும் கிடைப்பதாக மார்கோ போலோ என்ற அறிஞர் 1292-இல் இலங்கை வழியாக இங்கு வந்திருந்தபோது எழுதி வைத்திருக்கிறார். அவர் Bettelar என்று குறிப் பிடுவது இவ்வூரையே. லங்காபுர தண்டநாயகா என்ற இலங்கைத் தளபதி சில காலம் இவ்வூரைப் பிடித்து, அதிகாரம் செலுத் தினான்.