287 இந்தக் கோயிலின் சிற்ப வேலைகள் யாவும், திராவிடர்களின் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றன. இங்கு முதலில் தோன்றிய சிற்பங்கள் தான் பிறகு இன்னும் நுண்ணிய முறையில் சிதம்பரத் திலும்கும்பகோணத்திலுமுள்ள கோவில்களில் கையாளப் பட்டிருக்கிறது. இராமேசுவரம் கோவிலைக் கட்டுவதற் காகத் திருநெல்வேலி மாவட்டத்து அம்பாசமுத்திரம் பகுதியிலிருந்து பலவகையான கற்கள் வரவழைக்கப் பட்டன. இந்தக் கோவிலில் கல்யாணமண்டபத்தின் அருகேயும் இரண்டாம் பிரகாரத்திலும் சேதுபதிகள் பலரின் உருவங்கள் பொறிக்கப்பெற்றிருக்கின்றன. ஐந்து டிரஸ்டிகள் கொண்ட குழு இந்தக்கோவிலை நிர்வகித்து வருகிறது. இவர்களுள் இராமநாதபுரம் சேதுபதி குடும்பத்தாரும் தேவகோட்டை ஜமீந்தார் குடும்பத்தாரும் பரம்பரை டிரஸ்டிகளாக இருந்து வருகின்றனர். இக்கோயில் திருப்பணிக்கு இவ்விரு குடும்பத்தாரும் செலவு செய்துள்ள தொகை பல லட்சக் கணக்கினது. இந்நாள் விலையில் கோடிக்கணக்கினது. இந்த தேவஸ்தானத்து 76 கிராமங்கள் இராமநாத புரம், தஞ்சை, மதுரை, திருநெல்வேலி மாவட்டங் களில் உள்ளன. நேபாளம், திருவாங்கூர், புதுக்கோட்டை அரசர்களும் ஏராளமான கட்டளைகளை ஏற்படுத்தியிருக் கின்றனர்; . கருவறை கண்டியை ஆண்ட வரராச சேகரன் என்ற சிங்கள மன்னரால் கட்டப்பெற்றது என்றும் கல்வேலை கண்டியில் நடைபெற்றதாயும் கூறுவர். இதனினும் பழமையான பாண்டியர் காலத்து வேலைப் பாடும், விசயநகர அரசருக்குப் பிற்பட்ட வேலைப்பாடு களும் இக்கோவிலில் உள்ளன.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/289
Appearance