288 அமைப்புச் சிறப்பு இக்கோவில் நகரின் உயர்ந்த பகுதியில் அமைந்தது. கிழக்குமேற்கில் ஏறத்தாழ 1 பர்லாங்கும் தெற்கு வடக்கில் ஒரு பர்லாங்குமுள்ள பெரிய கோவில். கோபுரங்களில் புராண நிகழ்ச்சிகளை நினைவூட்டும் சிற்பங்களின் வேலைப்பாடு அவற்றைக் காண்பவரை ஈர்க்கும். திராவிடக் கட்டிடக்கலையின் மேம்பாட்டுக்கு இக்கோவில் எடுத்துக்காட்டாகக் கருதப்பெறுகிறது. இவ்வாறு கருதுவதற்குக் காரணம் இதிலுள்ள மூன்றாவது வெளிப்பிரகாரம் உலகத்திலேயே மிகப் பெரிய - மிக நீளமான - பிரகாரமாக இருப்பதாகும். இக்கோவிலுள்ள பிரகாரங்களின் மொத்த நீளம் 4,000 அடி. வெளிப்பிரகாரத்தில் மட்டும் 1,200 தூண்கள் - உள்ளன. சொக்கட்டான் மண்டபம் என்பது இக்கோவிலில் முக்கியமாகக் காணவேண்டிய பகுதி. கோவிலின் வெளிச்சுற்றில் இருந்த கடைகளில் 1972-இல் தீப்பிடித்தது. அந்தப்பகுதியை மீண்டும் புதிப்பிக்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது. கோவில் முழுவதையுமே புதுப்பிக்கும் பணியும் தொடங்கப் பெற்றிருக்கிறது. யூனெஸ்கோவும் இதில் ஓரளவு அக்கறை காட்டி வருகிறது. இராமேசுவரத்துக்குப் பெருமை தரும் வகையில் காஞ்சிகாமகோடி பீடத்தார் சங்கரமடம் அமைத்து அதில் ஜெய்பூர் சலவைக்கல்லில் ஆதிசங்கரர் திருவுரு வத்தைச் சமைத்திருக்கிறார்கள். இங்கு சரசுவதியின் திருவுருவமும் சரசுவதி நூலகமும் காணத்தக்கன
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/290
Appearance