உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

289 தீர்த்தங்கள் இராமேசுவர யாத்திரையில் தீர்த்தங்களில் நீராடுவது ஒரு முக்கியமான கட்டம். சில தீர்த்தங்கள் இராமாயணப் பாத்திரங்களின் பெயர்களில் ஏற்பட் டிருக்கின்றன. கோவிலுக்கு வெளியே கந்தமாதன பருவதத்துக்கு அருகில் எட்டுத்தீர்த்தங்கள் உள்ளன. உள்ளன. இவற்றிலும் ன்னும் அகஸ்திய தீர்த்தத்திலும் கடலிலும் நீராடுவது முக்கியம்.கோவிலுக்குள் 22தீர்த்தங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் கிணறுகளே. இவற்றுள் முக்கிய மானவை மகாலட்சுமி தீர்த்தம், பிரம்ம ஹத்தி விமோசன தீர்த்தம். சிவதீர்த்தம், சர்வ தீர்த்தம். எல்லாவற்றிலும் முக்கியமானது விசாலாட்சி அம்மன் சந்நிதிக்கும் ஜோதிர்லிங்கத்திற்கும் இடையே யுள்ள கோடி தீர்த்தம். ஏனைய தீர்த்தங்களிலெல்லாம் நீராடிய பிறகே கோடிதீர்த்தத்தில் நீராடவேண்டும். இராமேசுவரத்திலிருந்து புறப்படும்போதுதான் பெரும் பாலோர் இதில் நீராடுவர். காசிக்குப்போயும் கங்கையில் நீராடதவர்கள் இருப்பதுபோல இராமேசுவரத்துக்கு வந்தும் எந்தத் தீர்த்தத்திலும் ஆடாதவர்கள் இருக்கிறார்கள். அவர் களுக்குத் தீர்த்தக்கரைப்பாவிகள் என்று பெயர். தலப் பெருமை : இராமபிரான் தொடர்பால் இத்தலம் சைவர்களா லும் வைணவர்களாலும் புனிதமாகக் கருப்படுகிறது. எளிதில் இங்கு போய்விட இயலாது. இந்நாளில் எத்தனையோ அல்லல்களுக்கிடையே தான் மன உறுதி காரணமாக மக்கள் நடந்தும் படகிலும் இங்கு சென் று