உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 வந்தனர். இராமேசுவரம் யாத்திரை என்பது அறுபது ஆண்டுகளுக்குமுன் மூன்று மாதம் பிடிக்கும். போக்குவரத்து வசதி பெருகியிருந்தும் இப்போதும் புயலால் இராமேசுவர யாத்திரை சில சமயம் தடைப் படுகிறது. போய்ச் சேர்ந்த பிறகு குறிப்பிட்ட நாளில் திரும்பி விடுவோமென்று உறுதி சொல்ல முடியாது. பல்லாண்டுகளாகக் குழந்தைப் பேறு பெறாத கணவன் மனைவியர் இங்கு வந்து கடல் நீராடி, இராம லிங்கரை வழிபட்டு நாகப் பிரதிஷ்டை செய்து மீண்டும் ஒரு முறை இங்கு எல்லாச் சடங்குகளுடனும் புதிதாகத் திருமணம் செய்து கொள்கிறார்கள். இலக்கியங்கள் : இத்தலத்தைப்பற்றிப் பல புராணங்கள் உள்ளன. இவற்றில் முக்கியமானது சேது புராணம். திருஞான சம்பந்தர், இராமேசுவாத்தைப் பற்றி 21 பாடல்கள் பாடியுள்ளார். திருநாவுக்கரசர் 11 பாடல்கள் பாடியுள் ளார். அருணகிரிநாதர், தாயுமானவர் போன்ற பெரும் புலவர்களும் இத்தலத்தைப் பாடியிருக்கிறார்கள். பர்வத் வர்த்தனிப் பிள்ளைத் தமிழ் என்ற நூலும் வெளி வந்திருக்கிறது. கம்பராமாயணம் யுத்த காண்டத்தில் மீட்சி படலத்தில் சேதுவின் சிறப்பு சொல்லப் பெற்றிருக் கிறது. வடமொழியில் பல புராணங்களிலும் இலக்கியங் களிலும் வேதங்களிலும் இத்தலம் சிறப்பிக்கப் பெற் றிருக்கிறது. துளசிதாஸ் இராமாயணத்தில், இராமே சுவரத்தை வழிபடுபவனே எனக்கு ஆப்தன் ஆவான். ராமபிரானின் வாக்காகக்கூறப் பெற்றிருக் என்று கிறது.