உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

291 இறை உருவங்கள் : இங்குள்ள இறைவன் இராமநாதசுவாமி. இவரு டைய சந்நிதியே மூலத்தானம். இந்த லிங்கம் சீதா தேவியால் மணலால் ஆக்கப் பெற்று இராமபிரானால் புனிதமாக்கப் பெற்றது. இறைவி- பர்வத வர்த்தினி (மலைவளர்க்காதலி.) மதுரையில் போல இங்கும் சுவாமி சந்நிதிக்கு வலது பக்கம் அம்பிகை சந்நிதி இருக்கிறது. . காசித் தொடர்பை நினைவூட்டும் விசுவநாதர் விசாலாட்சி சந்நிதிகளும் இங்கு உள்ளன. விசுவநாதர் உருவம் அநுமனால் கொண்டு வரப்பெற்றது. விசுவநாத ருக்கும் விசாலாட்சிக்கும் தான் இக்கோவிலில் பூசை தொடங்குகிறது. பெருமாள், சுப்பிரமணியர், சேது நடராசர், முதல் மாதவர். ஆஞ்சனேயர், மகாலெட்சுமி சந்நிதிகள் உள்ளன. அஷ்டலெட்சுமி விக்கிரகங்களும் உள்ளன. இக்கோவிலிலுள்ள நந்திகேசுவர உருவம் அற்புத ஆச்சரியமானது. பெரியது. 23 அடி நீளம், 12 அடி அகலம், 173 அடி உயரம் உடையது. உற்சவ நந்தி கேசுவரரை அனுமாரும் தோன்றக்கூடிய விதத்தில் அமைத்த சிற்பியின் கூர்ந்த மதியும் கைத்திறனும் அபாரமானது. இரு கைகள் கூப்பியும் இருகைகளில் மான் மழுவுடனும் காட்சிதரும் அவ்வுருவம் மான் மழுக்களை மறைத்துவிட்டுப் பார்த்தால் அனும உருவம் போலத் தோற்றும். வால் குரங்கு வால்போலவும், அது தொடையுடன் சேர்க்கப்பட்ட இடத்தில் மாட்டு வால் குஞ்சம் போலவும் போலவும் தலவரலாற்றிற்கேற்ப நந்தியும் அனுமனும் ஏகமாய்த் தோன்றும் கைவண்ணம் மலைப் பைத் தருகின்றது.