உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 றைவனைச்சுற்றுலா கொண்டு வரும் காட்சி சிறப்பாக இருக்கும். இக்கோவிலிலுள்ள தங்க, வெள்ளி ரதங்கள், தேர்கள். நகைகள் முதலியவற்றின் ஊஞ்சல்கள், மதிப்பு பலகோடி ரூபாய் இருக்கும். நாள்தோறும் நடைபெறும் வழிபாடுகள் : நாள்தோறும் பல பூசைகள் இக்கோவிலில் நடை பெறுகின்றன. காலை 4-30 மணிக்கு நடைபெறும் மணி முத்து தரிசனம் இக்கோவிலுக்குச் சிறப்பாக உடையது. பகல் 12 மணி முதல் மாலை 4-30 வரை கோவில் பூட்டப்பட்டிருக்கும். நாள்தோறும் ஆறு கால பூசைகள் நிகழ்கின்றன, காலை 5 மணி - திருவனந்தல் (அபிஷேகத்துடன்.) காலை 7 மணி - உதயகாலம். - காலை 9 மணி - காலசந்தி பகல் 12 மணி - உச்சிக் காலம். மாலை 6 மணி -- சாயரட்சை. இரவு 9 மணி- அர்த்தசாமம். வடநாடும் இராமேசுவரமும்: வடநாட்டார் பெரும் திரளாக இந்தக் கோவிலுக்கு வருகிறார்கள். இமயமலையிலுள்ள பத்ரிநாதம், இந்தியா வின் கிழக்குக் கடற்கரையில் பூரியிலுள்ள ஜகந்நாதம். இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் குஜராத்திலுள்ள சோமநாதம், தென்கோடி இராமேசுவரத்திலுள்ள இராமநாதம் ஆகிய நான்கையும் தொன்றுதொட்டு ஹிந்துக்கள் வழிபட்டு வருகிறார்கள். இந்தியாவின் ஒற்றுமைக்கு இதுவே அடிப்படை. வடநாட்டு யாத்திரிகர்களுக்கு உதவ இராமேசுவரம் கோவில்களில் வடநாட்டு பண்டாக்கள் இருக்கிறார்கள்.