உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

295 நேபாள மன்னருக்குச் சொந்தமாக ஒரு பண்டா இத் தலத்தில் இருக்கிறார். நாட்டினருக்காக குஜராத்தியருக்காக ஒரு சத்திரமும் ஏனைய வட மன்னர்களாலும் செல்வர்களாலும் நிறுவப்பட்ட பல சத்திரங்களும் காஷ்மீர்க் காரர்களுக் காக நிறுவப்பட்ட இரண்டு சத்திரங்களும் ஆந்திரர்களுக்குப் உள்ளன. பல சத்திரங்களும் யாழ்ப்பாணத் தாருக்கு ஒரு சத்திரமும் பிராமணர்களுக்கு மொழி வாரி யாகத் தனித்தனிச் சத்திரங்களும் ஏனையோருக்கு எண்ணற்ற சத்திரங்களும் உள்ளன. பிர்லா இந்திய நாட்டின் பெரும் செல்வராகிய குடும்பத்தார், மிக வசதியான தங்கும் விடுதிகளைக் கட்டி 1972-இல் தேவஸ்தானத்துக்கு வழங்கியுள்ளனர். இதுவே இராமேசுவரத்தில் மிக வசதியான விடுதி. இதற்கு மூன்று லட்சம் ரூபாய் வரை செலவாகியிருக்கு மென்று தெரிகிறது. இதைத் தேவஸ்தானத்தார் வாடகைக்கு விடுகின்றனர். இராமநாத சுவாமி கோவில் கருவறைக்குள் செல்லும் உரிமை, 1. தலைமை அர்ச்சகர். 2. சிருங்கேரி சங்கராச்சாரியார் சுவாமிகள் 3. இராமநாதபுரம் சேதுபதி 4. நேபாள மன்னர் கிய நால்வருக்கு மட்டுமே உண்டு. சீக்கியர்களுக்கும் இராமேசுவரம் புனிதமான தலம். சீக்கிய குருமார்களில் முக்கியமான ஒருவர் குரு கோவிந்த சிங்.(அவர் வரலாறு தமிழில் வெளி வந் துள்ளது.) சீக்கியர்களுக்கு அவர் அமர்ந்த இடம் ஆலயம், அவர் பாதம்பட்ட இடமெல்லாம் புனிதத்