உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 தலம். குருகோவிந்த சிங் இங்கு வந்திருந்த போது தங்கிய இடத்தை, தமிழ் நாட்டு ஆளுநராயிருந்த சர்தார் உஜ்ஜல்சிங் பார்வையிட்டு அதில் நினைவுச் சின்னம் நிறுவ ஏற்பாடு செய்திருக்கிறார். காசி யாத்திரை : காசியும் இராமேசுவரமும் ஒன்றுக்கொன்று 1,500 மைல் தொலைவில் இருந்த போதிலும் இவற்றைச் சேர்த்து காசி இராமேசுவரம் என்று சொல்வது நம் நாட்டு மரபு. காசிக்குச் செல்பவர்கள் இராமேசுவரத் துக்கும் செல்ல வேண்டுமென்பதும் இராமேசுவரத் துக்குச் செல்லுவர்கள் காசிக்கும் செல்ல வேண்டும் மென்பதும் நியதி, காசி யாத்திரையோ இராமேசுவர யாத்திரையோ ஒன்றுடன் ஒன்று தொடர் பில்லாது செய்யப் பெறுவதில்லை. வட நாட்டிலிருந்து இராமேசுவரத்துக்கு வருபவர் கள் கங்கை நீருடன் வருவார்கள், . தென்னாட்டிலிருந்து காசியாத்திரை மேற்கொள் பவர்கள் யாத்திரையை இராமேசுவரத்தில் தொடங்கி, மீண்டும் இராமேசுவரத்துக்கு வந்து யாத்திரையை நிறைவு செய்வது வழக்கம். ராமேசுவரத்தில் கோடித் தீர்த்தமும் கடற்கரை மண்ணும் எடுத்துக் கொண்டு காசி யாத்திரை புறப்பட வேண்டும். இராமேசுவரத்து மண்ணைப் பிரயாகையில் கொட்டுவதும் கோடித் தீர்த்தத்தால் காசி விசுவநாதப் பெருமானை முழுக்காட்டுவதும் அவர்களுடைய கடமை, இவ்வாறே காசியிலிருந்து திரும்பியதும் கங்கை நீரால் இராமலிங்கப் பெருமானை முழுக்காட்ட வேண்டும்.