விவேகானந்தர் தொடர்பு : 297 1897- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் நாள் விவேகானந்தர் ராமேசுவரத்துக்கு வந்திருந்தார். அதன் நினைவாக, அவருடைய நூற்றாண்டு விழாவின் போது ஒரு கல் இங்கு பதிக்கப் பெற்றிருக்கிறது. 1897-இல் இங்கே குடகோபுர வாசலில் விவேகானந்தர் ஆற்றியஉரை அந்த இடத்தில் பொறிக்கப் பெற்றிருக் கிறது. இராமேசுவரத்தில் சேதுபதிகளின் அரண்மனை இருக்கிறது. வீரத்துறவி விவேகானந்தர் இங்குத் தங்கி இருந்தார். இந்தக் கட்டிடத்துக்கு அன்று முதல் விவேகாநந்த பாஸ்கரம் என்று பெயர். இப்பொழுது இக்கட்டிடம் தேவஸ்தானம் மேற்பார்வையிலிருக்கிறது. ஒருபக்கத்துச் சுவரில் சுவாமி அரசரைப்பற்றிக் கூறிய பாராட்டுரையும் மற்றொரு பக்கத்தில் சுவாமிகளுடைய அறிவுரைகளும் கல்லில் பொறித்திருக்கிறார்கள். அரசரைப் பற்றிக் கூறி இருப்பதாவது: "மாட்சிமை தங்கிய இராமநாதபுரம் ராஜா அவர்கள் என்னிடம் காட்டிய அன்புக்கு எனது நன்றியைத் தெரிவித்தல் எளிதல்ல, என்னாலோ என்மூலமாகவோ ஏதாவது நற் பணி செய்யப் பட்டிருக்குமாயின் இந்த நல்ல கன வானுக்கு இந்தியா கடமைப்பட்டுள்ளது. ஏனெனில் இவரே நான் சிகாகோவுக்குப் போக வேண்டுமென்ற எண்ணத்தைத் தோற்றுவித்தவர். அவ்வாறு செல்லப் பலமுறை தூண்டியவர். ஆத்மீகவழித் தொண்டு செய்ய வும் நம் அருமைத் தாய் நாட்டில் அக்கறை காட்டவும் இம்மாதிரி ஆறு ராஜாக்களாவது இருக்க வேண்டு மென்பது எனது விருப்பம். இந்நாடு முழுவதும் இவரை விட ஹிந்து மதத்தில் அதிக ஆர்வமுடையவர் இல்லை.' - 19 2
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/299
Appearance