298 இராமேசுவரத்தில் சுவாமிகள் பேச்சில் இன்னும் சில வரி, சுவர்களின் மற்றொருபக்கத்தில் படிக்கலாம். "அன்பே சமயத்திற்கு இருப்பிடம். பரிசுத்தமானவர் பிரார்த்தனைக்குப் பதில் கிடைக்கும். அழுக்கு மனத் தோடு கோவிலுக்குள் போகிறவன் அதிக னாகத் தன் வீட்டுக்குத் திரும்புகிறான்." தீவுகள் கடைய ராமநாதபுர மாவட்டம் ஏராளமான தீவுகளை உடையது. அவற்றில் 17 தீவுகள் முக்கியமானவை. இராமநாதபுரம் வட்டத்தில் 12-ம் முதுகுளத்தூர் வட்டத்தில் 5-ம் உள்ளன. இராமேசுவரம் தீவைப் பற்றி ஏற்கெனவே கூறிவிட்டோம். ஏனைய 16- ஐப் பற்றிக் கூறுவோம். 1. குருசடைத் தீவு: இத்தீவு பாம்பனிலிருந்து 4 கி.மீ. தொலைவிலும் இராமேசுவரத்திற்கு மிக அருகிலும் இருக்கிறது. இதன் சுற்றளவு 41 கி.மீ. இங்கு தமிழக அரசின் மீன் ஆராய்ச்சி நிலையமும் உயிரியல் மாணவர் கள் பார்வையிடும் காட்சிக்கூடமும் சிறுவிடுதியும் முத்துச்சிப்பி வளர்ப்பு நிலையமும் உள்ளன. ஜெல்லி செய்ய உதவும் பாசி இங்கிருந்து ஜப்பானுக்கு அனுப்பப் படுகிறது. ஆலைத் தொழிலுக்கு உதவும் சில ஆஸிட் களில் சேர்க்கப்படும் Sargassum என்ற பொருளும் பெயிண்டு செய்ய உதவும் சில பொருள்களும் இங்கு கிடைக்கின்றன. பட்டை சீவியதும் உள்ளே ரோஜாப்பூ நிறத்தில் உள்ள சூரியகாந்தி, தண்ணீர் நிறைய உள்ள நிக் கோபார் இளநீர், செவ்விளநீர் ஆகிய வகைகள் கிடைக் கின்றன.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/300
Appearance