299 2. சிங்களத் தீவு : குருசடைத் தீவிலிருந்து இரண்டு கி.மீ. தொலைவிலுள்ளது. சிங்களத்திலிருந்து மீன் பிடிக்க வருபவர்கள் இங்குத் தங்கும் வழக்கம் உண்டு. அதனால், சிங்களத் தீவு என்று பெயர் பெற்றது. மீன் பிடித்தல் முக்கிய தொழில். 3. பூமறிச்சான் தீவு: பாம்பனிலிருந்து ஏழு கி.மீ. தொலைவிலுள்ளது. மேட்டுப்பகுதி. பெரியகண்டத் தீவு, நடுத் தீவு. பூமறிச்சான் தீவு என்ற முப்பகுதியினைக் கொண்டது. இத் தீவுக்குப் பள்ளிவாசல் தீவு என்னும் ஒரு பெயருமுண்டு. 4. மணலித் தீவு : ஆழமில்லாக் கடலைக் கொண்ட இத்தீவு பாம்பனிலிருந்து ஏழு கி.மீ. தொலைவு இங்கு மீனவர்கள் மூங்கில் குச்சுகளைச் சதுரமாகக் கடலில் வரிசையாக நட்டு, வலைகளை அமைத்து மீன் பிடிப்பார் கள். இந்த முறைக்குக் களங்கட்டி மீன் பிடித்தல் என்று பெயர். இத்தீவில் சுண்ணாம்புக் கல் படிவங்கள் உள்ளன. கருவாடும் தேங்காயும் ஏற்றுமதி ஆகின்றன. 5. முயல் தீவு: மண்டபம் கேம்பிலிருந்து 10.கி.மீ. தொலைவில் உள்ளது. இத்தீவில் ஏராளமான முயல்கள் இருப்பதால், முயல் தீவு என்று பெயர் பெற்றது. 6: முளித் தீவு: புதுமடத்திலிருந்து 10.கி.மீ. தொலைவு.இது குடியிருப்பு இல்லாத தீவு. சுண்ணாம்புக் கல் வெட்டுவதற்கு மட்டும் சிலர் செல்லுகிறார்கள். இதுவெறும் பாறை; இங்கு மக்கள் யாரும் வசிப்ப ல்லை.இங்குச் சுண்ணாம்புக் கல் வெட்டி எடுக்கிறார்கள். 7. வாளைத் தீவு: (வாலித்தீவு, வலைத்தீவு) முளித்தீவி லிருந்து ஒன்றரைமைல் தொலைவிலுள்ளது. இங்கு மீன் கள் அதிகம் கிடைக்கின்றன.இங்கு ஒரு ரோமன்
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/301
Appearance