உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

301 16. கச்சத்தீவு: இந்தத் தீவின் பரப்பும் முக்கியத் துவமும் மிகக் குறைவு. ஆனால் செய்தித்தாளில் அடி பட்டு மிகவும் புகழ் பெற்றிருக்கிறது. இது இராமேசுவரம் நகரியத்தில் ஒரு பகுதி. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் நடு மையமாகயுள்ள கடல் திட்டு. நீளம் ஒரு மைலுக்கும் குறைவு. அகலம் 300 கெஜம். இராமேசுவரத்துக்கு. வடகிழக்கே 11மைல். தீவின் மொத்தப் பரப்பு 285 ஏக்கர். இங்கு மக்கள் யாரும் வசிப்பதில்லை. கசப்பான தண்ணீர் உடைய தீவு ஆதலால் கச்சத்தீவு என்று பெயர் ஏற்பட்டது. இலங்கை அரசு இதில் உரிமை கொண்டாடுகிறது. வட இலங்கைத் தேர்தல் ஒன்றில் கச்சத் தீவும் சேர்க்கப் பட்டிருக்கிறதாம். இங்குள்ள புனித அந்தோனியார் மாதாகோவில் இலங்கையின் வடகோடியிலுள்ள ஒரு திருச்சபைப் பிரிவுக்கு உட்பட்டதாம். வாரம் ஒரு முறை ஒரு பாதிரியார் இந்தத் தீவி லுள்ள கோவிலுக்கு வந்து பூசை செய்கிறார். அரை மணிக்கு ஒரு பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை இங்கு மீனவர் வரு கிறார்கள். ஆண்டுதோறும் மார்ச்சு மாதம் புனித அந்தோனியர் கோவிலில் மூன்று நாட்களுக்கு ஒரு திருவிழா நடைபெறுகிறது. திருவிழாக் காலத்தில் இராமேசுவரத்திலிருந்தும் யாழ்ப் பாணத்திலிருந்தும் படகு - இயந்திரப்படகுகளும் நாட்டுப் படகுகளும் - கச்சத் தீவுக்குச் செல்லுகிறது. எனவே 5,000 பேர் இந்த சின்னஞ் சிறு தீவில் கூடு கிறார்கள். தெய்வ வழி பாட்டுக்காக வருவோரன்றி கள்ளக் கடத்தல் நடத்துவதற்கும் பலர் வருகின்றனர். இந்தியாவில் கிடைப்பதற்கு அரிதாக உள்ள ஹார்லிக்ஸ், ட்ரான்சிஸ்டர், பிளேடுகள், நைலான் துணிகள் முதலிய