302 வெளி நாட்டுப் பொருள்களை இலங்கையரும். இலங்கை யில் கிடைப்பதற்கு அரிதாக உள்ள பொருள்களை இந்தியர்களும் எடுத்துச் சென்று அங்கு பண்டமாற்று தல் நடத்து வதாகவும் கூறப்படுகிறது. இதனைக் கட்டுப் படுத்துவது சிரமமாக இருக்கிறது. 1968- ஆம் ஆண்டில் இத்தீவு யாருக்குச் சொந்தம் என்ற கேள்வி பிறந்தது இலங்கை உரிமை கொண்டா டிற்று. தங்கள் கடற்படையினர் இங்கு வந்து பயிற்சி பெற்றிருப்பதாகவும் இலங்கை அரசு தெரிவித்தது. ஒவ்வொரு திருவிழாவின் போதும் இலங்கை இராணுவம் கடற்படை ரோந்துக்குழுவினா கப்பல், மோட்டார் படகுகளில் கச்சத் தீவுக்கு வருகிறார்கள். ஆனால்,இந்திய இராணுவம், போலீஸ் யாரும் போவது மில்லை, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது மில்லை, இதனால் கச்சத் தீவு கேட்பாரற்ற நாதியற்ற தீவு என்று இலங்கை அரசு கருதியது. 'கச்சத் தீவு பாத்தியதை உரிமை இலங்கையைத் தவிர வேறு யாருக்கும் இல்லை" என்றும் கச்சத் தீவிற்கு இராணுவம் அனுப்பப்படும் என்றும் என்றும் இலங்கை அரசு கூறியிருக்கிறது. தமிழ் நாட்டுக் கடற்கரைப் பகுதியிலேயே அதிக அளவுமீன் பிடி படும் இடம் கச்சத் தீவுப் பகுதிதான். உலகிலேயே அதிக அளவு மீன் பிடிபடும் இடம் பால்கன் (ஐரோப்பா). இந்த இடத்திற்கு ஒப்பாக கச்சத் தீவை கூறுகிறார்கள். மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கப்போய் 4 அல்லது 5 நாட்கள் கடலில் தங்கி மீன் பிடிக்கிறார்கள் அல்லவா? அவ்வாறு போகும் மீனவர்கள் கடலில் வலை களைப் போட்டு விட்டு கச்சத் தீவில் தங்கி இருப்பார்கள். எனவே, கச்சத் தீவு மீனவர்களின் கேந்திரமாகும்
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/304
Appearance