803 இந்தத் தீவு ஜமீன் காலத்தில் இராமநாதபுரம் மன்னர்களின் ஆளுகையின் கீழ் இருந்தது. இந்தத் தீவு இராமநாதபுரம் மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டது என்பதற்கு வரலாற்றுச் சான்றுகளும் பாத்தியதை உரிமைச் சாசனமும், செப்புப் பட்டயமும் உள்ளன. முன்பு இராமநாதபுரம் மன்னர்கள் கச்சத் தீவில் நில வரி, தீர்வை, குத்தகை முதலியவைகளும் வசூல் செய்து வந்தார்கள். ஜமீன் ஒழிப்பிற்குப் பின் தீவு இந்திய அரசின் உரிமைக்கு வந்தது. ஆள் நடமாட்ட மில்லாத கச்சத் தீவில் கிறிஸ்தவ கோவிலான அந்தோணியப்பர் தேவாலயம் ஒன் றுள்ளது. இந்தக் கோவிலை இராமநாதபுர மாவட்டம் தொண்டி அருகேயுள்ள நம்புதாளை என்ற ஊரைச் சேர்ந்த தமிழர் ஒருவர்கட்டினார். அவர் சென்ற படகு புயலில் சிக்கியபோது அவர் அந்தோணியப்பரைப் பிரார்த்தித்துக் கொண்டதாகவும், அதன் காரணமாக அவர் புயல் அபாயத்திலிருந்து தப்பியதாகவும் அதனா லேயே அவர் அக்கோவிலைக் கட்டியதாகவும் வரலாறு. சேதுபதியுடைய ஆட்கள் இத்தீவில் 1802 வரை முத்துக்குளித்து வந்தனர். கிழக்கிந்தியக் யின் . கம்பெனி வேண்டுகோளைப் புறக்கணித்து, இஸ்து மீரார் சனத் உடன் பாட்டின்படி, ஆங்கில அரசு சேதுபதிகளின் உரிமையைத் தொடர்ந்து ஏற்றது; விக்டோரியா மகாராணி ஒரு பிரகடனத்தின் வாயிலாக இதனை உறுதி செய்துள்ளார். இரண்டாம் போர்க்காலத்தில் இலங்கை விமானப் படையினர் பயிற்சித் தளமாகப் பயன்படுத்த முயன்ற 7. 1956-1960-D 1956-லும் 1960-லும் இதன்மீது உரிமை பற்றி இந்திய நாடாளுமன்றம் விவாதித்தது. ஆளில்லாததும் 1
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/305
Appearance