304 ஒரு தகரக் கொட்டகை மட்டும் இருப்பதுமாகிய இந்தக் குட்டித்தீவு யாருக்குச் சொந்தம் என்பது பற்றி இது வரை முடிவாகவில்லை. தீவில் இருப்பவை: அடர்ந்த செடிகள். ஒரு தகரக் கொட்டகையில் தேவாலயம். தீவில் இல்லாதது: மக்கள் குடியிருப்பு தீவில் நிகழ்வது பாடு, கத்தோலிக்கர் தேவாலயத் திருவிழா. கள்ளக்குடியேற்றத்திற்கு 2. முதுகுளத்தூர் வட்டம் ஏற் இம்மாவட்டத்தின் கடலோரத்தில் அமைந்த இவ் வட்டம் தமிழ் நாட்டிலேயே மிகவும் பிற்பட்டது. இரயில் வசதி இங்கே கிடையாது. மிளகாய் சாகுபடியும் மீன் பிடித்தலும் தவிர வேறு தொழில் கிடையாது. சில ஆண்டுகளுக்குமுன் வரை அரசாங்கத்தாரால் மிகவும் புறக்கணிக்கப் பெற்ற வட்டம் இது. அரசியல் பெருந்தலைவராகிய பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவரவர்களை இவ்வட்டம் தந்திருக்கிறது. அவருடைய ஊராகிய பசும்பொன் இவ்வட்டத்திலிருக் கிறது. அவர் முக்குலத்தோரின் தந்தையாகவும் தெய்வமாகவும் கருதப்படுகிறார். அவருடைய சமாதி இங்கு காணவேண்டியது செவ்வாய், வெள்ளிக்கிழமை களிலும் அவர் மறைந்த அக்டோபர் 30 ஆம் நாளிலும் திரளான மக்கள் இங்கு கூடுகிறார்கள். இங்கு மொட்டை அடித்துக் கொள்பவர்களும் உண்டு. தேவர் பெயரால் ஒரு கல்லூரி 1971-இல் தொடங் கப் பெற்றிருக்கிறது. இவ்வட்டம் மறவர் நாடு. முஸ்லிம்கள் பல ஆயிரம் பேர் இருக்கிறார்கள், நாடார்களும் ஹரிஜனங்களும்
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/306
Appearance