305 பல இருக்கிறார்கள். ஆயினும் தொன்று தொட்டு இது மறவரிப் பெருங்குடி மக்களுக்கேயுரிய வட்டம். மறவர் களுடைய ஆதரவுடன்தான் நூற்றாண்டுகளாக இவ்வழியாக சேது யாத்திரையை ஹிந்துக்கள் மேற் கொண்டிருக்கிறார்கள். தஞ்சை, பீஜப்பூர், மைசூர், திருவிதாங்கூர் அரசர்களுடன் நடத்திய போர்களில் மதுரை நாயக்க மன்னர்களுக்கு இங்கிருந்து மறவர் படை சென்று உதவியது. எனவே இங்கு ஒரு போதும் வசூலிக்கப்பட்டதில்லை, மதுரை மன்னர்களும் இவர்களை அடக்க முயன்றதில்லை. முத்து வீரப்ப நாயக்கர் இவர்களை அடக்க முயன்றபோது அவருடைய ஆட்சி சீர்குலைந்தது. வரி பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலும் மறவர் நாட்டில் கொந்தளிப்பு இருந்தது. 1957-இல் காங்கிரஸ் ஆட்சியில் மறவர்கள் அடக்கப்பட்டனர். அதை எதிர்த்து அவர் கள் தேவர் தலைமையில் கிளர்ந்து எழுந்தார்கள். அரசாங்கம் இவ்வட்டத்தில் செயல்படவில்லை. கீழத் தூவல் என்ற ஊரில் மறவர் சிலர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து பெருங் கொந்தளிப்பு ஏற்பட்டது. தமிழ் நாடெங்குமுள்ள மக்களின் அனுதாபத்தை மறவர் பெற்றனர். தமிழ் நாடு சட்ட மன்றத்திலும் இந்திய நாடாளு மன்றத்தி லும் முதுகுளத்தூர் கலகங்களைப்பற்றி பல நாட்கள் விரிவான விவாதம் நடைபெற்றது. இந்தக் கலகம் தமிழ் நாட்டில் காமராஜரின் தலைமையும் செல்வாக்கும் குறைவதற்கு ஒரு காரண மாக இருந்தது. இவ்வட்டம் இயற்கை வளங்கள் இல்லாதது. இவ்வட்டத்தினுடைய தேவைகளை 1961-க்குப் பிறகு
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/307
Appearance