800 தான் தமிழக அரசு சிந்திக்கலாயிற்று. 1963 க்குப் பிறகு தான் செயலாற்றத் தொடங்கினர். 1967 க்குப் பிறகு ஓரளவு இவ்வ்ட்டம் முன்னேறியிருக்கிறது. போலீசு நிலையங்கள் மட்டுமே மிகுதி என்ற நிலைமாறி வருகிறது. வைகையிலிருந்து கிருதுமால் ஆறு, கூத்தாங்கால், பரனைக்கால்வாய் ஆகிய மூன்றையும் பிரித்து ரகுநாத காவேரித் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இது இவ்வட்டத்துக்குப் பயன் தரும். இவ்வட்டத்தில் பல ஊர்களின் பெயர்கள் இப்பகுதி யின் தொன்மையையும் வரலாற்றுச் சிறப்பையும் நினை வூட்டுவன. தேவர் பிறந்த பசும்பொன் அவ்வூரின் புவி யியல் வளத்தை உணர்த்தும், செம்பொன்னூர் என்னும் ஊர் செம்பனூர் என்ற பெயரில் திருப்பத்தூர் வட்டம் கல்லல் பகுதியில் இருக்கிறது. வெண் பொன்.கரும் பொன்,செம்பொன், ஐம்பொன், பைம்பொன் எனப் பழந்தமிழர் பொன்னைப் பலவாறு வகுத்தனர். பைம் பொன்னே பசும்பொன். . முரட்டுத்துணிக்கு உதவும் கீழ்காடு உப்பன் பருத்தி இவ்வட்டத்தில் பயிரிடப்படுகிறது. இதை ஜப்பானியர் வாங்கி, பிற பருத்திகளுடன் கலந்து பயன்படுத்து கிறார்கள். 11-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சரவணப் பெருமாள் கவிராயர் இவ்வட்டத்தினர். " இவ்வட்டத்தில் முதுகுளத்தூர், கடலாடி, கமுதி என்ற மூன்று ஒன்றியங்கள் உள்ளன. முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் இவ்வொன்றியத்தின் பரப்பு 132 சதுர மைல். தமிழ் நாட்டிலேயே மிகவும் குறைவாக மழை பெய்யும்
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/308
Appearance