உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலங்கானூர்: கொடுமளூர்; 308 அலங்கா நல்லூர் என்பதன் மரூஉ. இங்குள்ள முருகன் கோவில் புகழ் பெற்றது. இக்கோவிலுக்கு, சவ்வாதுப் புலவர் பாட்டு உண்டு. மேலக்காஞ்சிரங்குளம்: ஆயிரத்துக்கு மேற்பட்ட வண்ணப் பறவைகள் பறவைகள் உறையும் ஏரி உளது. இவை இலங்கை, மலேயா, அந்தமான் தீவுகளிலிருந்து வரு கின்றன. திருவரங்கம் : வைணவர்கள் வாழும் சிற்றூர். அலங்கானூருக்கு அருகே இருக்கிறது. இவ்வொன்றியத்து ஊர்களுள் பெயர்ச் சிறப்பால் குறிப்பிடத்தக்க : ஆனைசேரி,நல்லூர், செல்லூர், சிறு குடி, சிறுதலை, தேரிருவேலி, வளநாடு, வெண்கலக் குறிச்சி, விளக்கனேந்தல். கடலாடி ஊராட்சி ஒன்றியம் இது கடலோரமாக அமைந்தது. இங்கு பேரூராட்கி ஒன்றும் இல்லை 59 ஊராட்சி மன்றங்கள் உள்ளன. கடலோரப் பகுதியாக இருந்தும் இங்கு உப்பளம் கிடை யாது. ஆண்டில் ஐந்து மாதங்கள் மீன் பிடிக்கிறார்கள். கடலாடி: இவ்வூர் முதுகுளத்தூரிலிருந்து 15.கி.மீ. தொலைவில் இருக்கிறது. இங்கிருந்து சாயல்குடி 11. கி.மீ. கடலோரத்திலுள்ள ஒப்பிலான் என்னும் ஊரும் இங்கிருந்து 11 கி. மீ. தொலைவே. கடல் அலைகள் எப்போதும் இவ்வூரில் கேட்கின்றன. ஒருகால் இவ்வூர்ப் பெயருக்கு இது காரணமாக இருக்கக்கூடும். உப்பு நீரும் உப்பு மண்ணும் இவ்வூரின் இயல்பு. எனினும் பாலைவனத்தில் சோலைவனம் இருப்பது