809 போன்று, இங்கு ஒரு சில இடங்களைத் தோண்டினால் தெளிவிலும் நிறத்திலும் பால் போன்ற நீர் ஊறுகிறது. கேப்பை வேளாண்மை மிகுதி. . ஒவ்வொரு நாளும் மாலையில், கடல் மீனும் தண்டும் இங்கு விற்பனையாகிறது. மக்களின் முக்கிய உணவும் ஏற்றுமதியும் இவையே. சக்கிலியரின் கடலாடி தொழில் வளர்ச்சிக்குக் ஊராட்சி மன்ற ஒன்றியம் மிகவும் உதவியிருக்கிறது. கடலாடி என்னும் பெயருள்ள ஊர் வட ஆர்க்காடு மாவட்டத்திலும் இருக்கிறது. இதம் பாடல்: இசை நலம் பொருந்திய இப்பெயர் ஆராய்ச்சி குரியது. உச்சி நத்தம் : கடலோரமாக அமைந்த இப்பகுதி யில் ஊரருகே குடிதண்ணீர் இருப்பது ஒரு சிறப்பு. நெல்லை மாவட்டம் சீவலப் பேரியில் இதற்கு முற்றிலும் மாறுபட்ட நிலை உண்டு. செக்குக்கு மாடு கொடுத்தா லும் சீவலப் பேரிக்குப் பெண் கொடாதே நெல்லைப் பழமொழி. . என்பது இவ்வூரைப் பற்றிய பின் வரும் பாடல் திரு. போத் தையா அவர்களால் சேகரிக்கப் பெற்று பேராசிரியர் வானமாமாலை அவர்களுடைய 'தமிழ் நாட்டுப்பாமரர் பாடல்கள்' என்னும் நூலில் வெளி வந்துள்ளது; ஊரைச்சுத்தி உப்புத் தண்ணி. ஒரு கிணறு நல்ல தண்ணி. தேங்காய்த் தண்ணி உச்சிநத்தம். தேடிவாங்க வாக்கப்பட! ஊருண்ணா நம்ம ஊரு உலகமென்னா ராமேசுவரம்.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/311
Appearance