313 அபிராமம்: முதுகுளத்தூரிலிருந்தும் கமுதியிலிருந் தும் 8 கி.மீ. தொலைவு. இம்மூன்று ஊர்களும் ஏறத்தாழ முக்கோண வடிவில் உள்ளன என்று சொல்லலாம். முஸ்லிம்கள் இராமநாதபுர மாவட்டத்தில் பெருந் தொகையினராக வாழும் 5, 6 ஊர்களில் இது ஒன்று இவ்வூரார் சிலர் கைலிவாணிபத்தில் உயர்நிலை அடைந் துள்ளனர். இங்குள்ள மசூதி, 120 அடி உயரமுள்ள கூண்டுடன் கூடியது. புகழ் பெற்றது. உயர்நிலைப் பள்ளிக்குச் சிறந்த கட்டிடம் உண்டு. இராணிசேதுபுரம்: இச்சிற்றூர் பெருநாழிக்கும் விளாத்திகுளத்துக்கும் இடையேயுளது. முதுகுளத் தூரிலிருந்து 19கி.மீ. தொலைவு, நெல்லை மாவட்டத் தின் எல்லையருகே அமைந்தது. இது, இராமநாதபுரம் சேதுபதியின் ஆட்சியில் இருந்த ஊர். இதனை நிலைநிறுத்தும் பொருட்டுச் சேதுபுரம் என்றும்,பட்டத்தரசியை நினைவுகொள்ளும் முகத்தான் இராணி என்ற அடைமொழியும் இடப் பெற்றதாகவும் இவ்வூரார் கூறுவர். அம்மனையும் அப்பனையும் ஒருசேர இணைத்துப் பெயரிடுவதுபோல இவ்வூருக்கும் பெயர் வைத்திருக்கலாம் எனக்கருத டம் உண்டு. அகத்தாரிருப்பு : இது நிறைந்த ஊர் யாதவர்கள் செல்வாக்கு குறையற் வாசித்தான்: இவ்வூர் கூடகுளத்துக்கு அருகே இருக்கிறது. இவ்வூரின் பெயர் குறைகுறச்சான் என்று வழங்கி வருகிறது. பழைய ஏட்டை நன்றாக வாசித்து முடித்த ஒரு புலவருக்கு இவ்வூர் மூற்றூட்டாக வழங்கப்பெற்றது. .20
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/315
Appearance