களுக்கு சிறந்து 314 பசும்பொன்: கமுதியிலிருந்து 5.கி.மீ.தொலைவி லுள்ளது. தேவர் சமாதியும் கல்லூரியும் உடையது. மண்டல மாணிக்கம்: இது சேதுபதிகளால் பிராமணர் வழங்கப்பெற்ற ஊர். நெசவுத்துறையில் விளங்கும் விளங்கும் முதலியார்களால் செழிப்படைந் திருக்கிறது.இராமேசுவரம் வெங்கோபராவ் சத்திரத் துக்கு இவ்வூரில் நிலங்கள் உள்ளன. சிவன் கோவிலும் பெருமாள் கோவிலும் இவ்வூரிலிருக்கின்றன. சித்திரைத் திருவிழா, மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகியவை இவ்வூரில் முக்கியவிழாக்கள். கண்டமாணிக்கம் என்னும் ஊர் இம்மாவட்டத் தில் திருப்பத்தூர் வட்டத்திலிருக்கிறது. கூடல் மாணிக்கம் என்ற பெயரில் கேரளத்தில் கோட்டயம் மாவட்டத்தில் ஓர் ஊர் இருக்கிறது. 3. சிவகங்கை வட்டம் இராமநாதபுரம் அரசர்க்கு அடுத்தபடி இம் மாவட்டத்தில் புகழ்பெற்ற சிவகங்கைக் குறுநிலமன்னர் களின் தாயகம் இவ்வட்டம். மக்கள் தொகை மூன்று லட்சம். வைகை பாய்வதாலும், பெரியாற்றுக் கால் சில பகுதிகளுக்கு வருவதாலும், வட்டத்தின் ஒரு பகுதி வளமாக இருக்கிறது. வெளிநாடுகளில் பொரு ளீட்டி இங்கு வாழ்வதுதான் வழக்கமாக இருந்திருக் கிறது. தொழில்கள் தொடங்கவும் வேளாண்மையில் முன்னிலும் கூடுதலாக ஈடுபடவும் இப்போது மக்கள் முன்வருகின்றனர். அரசாங்க அலுவலகங்கள் நிறைந்த நகரமாகச் சிவகங்கை இருந்து வருகிறது. முக்குலத்தோரே இங்கு முக்கியமான சமூகம். கிறித்தவ சமயம் ஓரளவு பரவியிருக்கிறது.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/316
Appearance