உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

313 சிவகங்கைச் சீமையின் சிறப்புக்கள் கல் தோன்றி மண் தோன்றாக் காலமுதற்கொண்டு வேலும், வாளும், கோலும் குந்தமும், ஈட்டியும் மழுவும் தமிழ்நாட்டு மறவர் கையில் பல நூற்றாண்டுகளாக விளையாடி வந்திருக்கின்றன. இக்குலத்தினர் ஆண்ட சீமைகள் இரண்டு - இராமநாதபுரமும் சிவகங்கையும். இராமநாதபுரத்திலிருந்து பிரித்து ஒரு ஒரு பகுதியைச் சேதுபதி தம் மகளுக்கு வழங்கியதால்தான் சிவகங்கை அரசு தோன்றிற்று. குருவை மிஞ்சின சீடர்போல, தாய்ச்சீமைக்கு இல்லாத ல்லாத பல சிறப்புகளை சிவகங்கை பெற்றிருக்கிறது. இலக்கியத்திலும், வரலாற்றிலும் புகழ்பெற்ற "தொண்டி"த் துறைமுகம் சிவகங்கைக்கு உட்பட்டது இதனால் சிவகங்கை மன்னர்க்குத் தொண்டியன். துறையான்" என்னும் பட்டம் ம் உண்டு. பாண்டியர் தலைநகரான மதுரை அவர்களுடைய துறைமுகமான தொண்டி இரண்டையும் இணைக்கும் சாலை சிவகங்கை வழியே செல்லுகிறது. இரு நகர்களும் சிவகங்கையி லிருந்து ஒரே தொலைவில் உள்ளன. வரலாறு தொடங்கிய காலம் முதல் உரிமையோடு இருந்த வீரர்களைப் படைத்த கான நாட்டையும் கானப்பேர் என்ற கோட்டையையும் உடையது இந்தச் சீமை, 12-ஆம் நூற்றாண்டில் படையெடுத்த லங்காபுர தண்டநாயக, 18-ஆம் நூற்றாண்டில் படையெடுத்த (கிழக்கு இந்தியக் கும்பெனியின் கவர்னராக மதுரை யிலும் திருநெல்வேலியிலும் இருந்த) ஜாக்சன். லுஷிங்டன், தளபதி அக்ணூ ஆகியோர் போராட்டங் களையெல்லாம் சமாளித்தது இந்தச் சீமை.