உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 வீரப்போரிட்ட வீர வெள்ளையரை எதிர்த்து பாண்டியக் கட்டபொம்மனுக்குப் படையும் துணையும் இடமும் தந்தது சிவகங்கைச் சீமை. இந்தியவிடுதலை இயக்கத்தின் முன்னோடித் தளபதிகளாகிய சின்னமருது, பெரிய மருது சகோதரர்களைத் தந்ததும் இப்பகுதியே, ஜான்சிராணிக்கு முன்னரே வேலுநாச்சியார் என்ற வீர நங்கையைத் தந்து பெண்ணின் பெருமையை அறிவுறுத்தியதும் இந்தச் சீமையே. காளையார்கோவில் கோபுரத்தைக் கட்டியும், சருகணி கத்தோலிக்க ஆலயத்துக்கும் எறும்புக்குடி யிலும் நரிக்குடியிலும் பள்ளிவாசல்களுக்கும் திருக் கோட்டியூர் வைணவர் கோவிலுக்கும் மானியம் வழங்கி மருதிருவர் இன்றைய இந்தியாவின் சமயப்பொது நோக்கு ஆட்சிக்கு அடிகோலியது சிவகங்கைச் சீமையில் தான். உடல்வன்மை வேண்டுமென்று இப்போது பலர் அடிக்கடி கூறிவருகின்றனர். 70, 80 ஆண்டுகளுக்கு முன்னரே சிவகங்கையில் விளையாட்டுக்கள் சிறந்து விளங்கின. அரசர் பிறந்த நாளிலும் நவராத்திரி விழாவின்போதும் விளையாட்டுப் பந்தயங்கள் நடை பெற்றன. ஹாக்கி, கிரிக்கட், கால்பந்து, குதிரைமீதேறி ஆடும் போலோ இப்படிப்பல ஆட்டங்கள் நடந்த வண்ணமாக இருந்தன. அரசகுடும்பத்துப் பெண்டிரும் குதிரை சவாரி செய்த சிவகங்கையில், இன்று குதிரைகள் அரிது. விளையாடுவதற்கு ஆள் கிடைக்கவேண்டுமென்பு தற்காக ஒர் உயர்நிலைப்பள்ளியைச் சிவகங்கை அரச குடும்பம் தொடங்கியது என்ற செய்தி வியப்பாக இருக்கலாம்; ஆனால், அதுவே உண்மையான காரணம். மகாத்மா காந்தியடிகள் ஹரிஜன இயக்கம் தொடங்குமுன்னரே. சிவகங்கை அரசகுடும்பத்தார்