30 உள்ளன. மூவாயிரம் ஆண்டுகளாக இம்மாவட்டத்தில் நடைபெற்ற வெளி நாட்டு வாணிபமே பல்லவர் தொடர் புக்கு காரணமாகும். சோழர் இலங்கைக்கும் சோழ நாட்டுக்கும் இராமநாதபுர மாவட்டத்து வழியாகத் தொடர்பு ஏற்பட்டது சோழர் இலங்கையை ஆண்டபோது, இராமநாதபுர மாவட் டத்தில் சோழர் செல்வாக்குப் பரவியது. சோழருக்கும் பாண்டியருக்கும் போர் மூண்டபோது பாண்டிய அரசர் சிலர் இலங்கை அரசர்களின் உதவியைப் பெற்றதால், சோழர்கள் பாண்டிய நாட்டைச் சேர்ந்த இராமநாதபுர மாவட்டத்தைப் பிடித்துக் கொண்டனர். இராஜராஜ சோழனின் ஆட்சியில் இராமநாதபுரம் சீமை சோழர் வசப்பட்டது. சோழர் ஆட்சியின் அறிகுறியாகப் பல ஊர்கள் இராமநாதபுர மாவட்டத்தில் உள்ளன. சான்று: சிவ கங்கைக்கு அருகேயுள்ள சோழபுரம், திருப்பத்தூர் வட்டத்திலுள்ள சோழன் பட்டி (இப்போது சோளகன் பட்டி என்று மருவி வழங்கி வருகிறது), கண்டவராயன் பட்டியை அடுத்த பையூர் முதலியன. பையூர் எனும் பெயர் சோழ ஆட்சியில் பல ஊர்களுக்கு வழங்கிற்று. பரமக்குடி வட்டத்தில் போகலூர்ப் பகுதியில் கங்கைகொண்டான் என்னும் ஊரும், திருப்பத்தூர் வட்டத்தில் ஏரியூர்ப் பகுதியில் ஜெயங்கொண்டான் (நிலை) என்னும் ஊரும் உள்ளன. யார் சோழர்- பாண்டியர் போராட்டங்களில் பல சாதி டம் ம் பெயர்ந்தனர். இவ்வாறு இராமநாதபுர மாவட்டத்திற்குக் குடியேறியவர்களுள் காவிரிப் பூம்பட்
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/32
Appearance