உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$1 டினத்திலிருந்து வந்த நகரத்தார்களும், வல்லம் பகுதியி லிருந்து பள்ளத்தூர் முதலிய பகுதிகளுக்கு வந்து 'வல்லம்பர்' என்ற பெயரால் இன்றளவும் விளங்கும் முக் குலத்தோரும் குறிப்பிடத்தக்கவர்கள். இலங்கையர் 'ஆட்சி' சிறை கி.பி.1170-இல் இலங்கை வேந்தனாகிய பராக்கிரமப் பாகு, பாண்டிய அரசனான பராக்கிரமனுக்கு உதவுவதற் காக இலங்கையிலிருந்து பெரும் படை ஒன்றை அனுப் பினான். அப்படை வருவதற்குள் மதுரை அரசின் உரிமை தனக்கே என்று கோரிய குலசேகரப் பாண்டியன் ஆட்சியிலிருந்த பராக்கிரமப் பாண்டியனையும் அவன் குடும்பத்தையும் வைத்துப் பிறகு அவர்கள் அனைவரையும் கொன்று பட்டத்தை அடைந்தான். இராமேசுவரம் தீவில் கந்தமதான பருவத்திற்கு அருகே புலியடிச் சாலை என்னுமிடத்தில் இலங்கைப் படை இறங்கியது. அங்கு ஒரு சிவன் கோவில் கட்ட இலங்கை அரசன் ஏற்பாடு செய்தான் என்பதும் பௌத்த கோவில் ஒன்றையும் அமைக்கச் சிங்களப் படை வீரனான லங்காபுர தண்ட நாயகா அடிகோலி னான் என்பதும் ஆதாரத்துடன் கூறப்படுகிறது. இலங்கைப் படை சிவகங்கை அருகேயுள்ள அரண்மனைச் சிறுவயல் வரை வெற்றி நடைபோட்டுச் சென்றது. தொண்டி, பாசிப்பட்டணம், குன்றக்குடி ஆகியவற்றையும் அப்படை கைப்பற்றியது. ஆ குலசேகரப் பாண்டியன் தோல்வியடைந்து திருச்சி மாவட்டப் பொன்னமரா வதியில் ஒளிந்துகொண்டான். அங்கு அவனது ஆதரவாளர்களின் கட்டடங்கள் யாவும் இலங்கை வீரர்களால் தீக்கிரையாக்கப்பட்டன. பிறகு