323 காளையார் கோவில் ஊராட்சி ஒன்றியம் சிவகங்கை வட்டத்தின் தென்பகுதியில் அமைந் துள்ள இவ்வொன்றியத்தின் பரப்பு 208 சதுரமைல். இதில் 74 ரெவினியூ கிராமங்கள் உள்ளன. நாட்டரசன் கோட்டையில் பேரூராட்சியும் 42 ஊராட்சி மன்றங் களும் உள்ளன. ஒன்றியத்து அலுவலகம் காளையார் கோவிலில் இருக்கிறது. இங்கு நீர் வளம் குறைவு. வானம் பார்த்த பகுதியாக இருப்பதால் மக்களுக்கும் ஒன்றியத்துக்கும் வருவாய் குறைவு. மக்கள் தொகை 75, 593. தரமான செங்கற்களும் ன்சுலேட்டர்களும் செய்தற் கேற்ற மண்வளம் நாட்டரசன் கோட்டையில் காணப்படுகிறது. முத்தூர் வாணியங்குடி என்னும் ஊர்ப் பெயர் ஒரு காலத்தில் இப்பகுதியினர் முத்து வாணிபம் செய்ததை நினைவூட்டுகிறது. திருவாடானை வட்டத்தை ஒட்டிய பகுதிகளில் கிறித்தவ சமயம் பரவியிருக்கிறது. இவ்வொன்றியத்து வழியாகக் காரைக்குடி சிவகங்கை இரயில் பாதை செல்லுகிறது சைவ காளையார் கோவில்: சங்க இலக்கியத்திலும் சமய இலக்கியத்திலும், பாண்டியர் காலமுதல் 19-ஆம் நூற்றாண்டுவரை வரலாற்றிலும் நிலைத்த இடம் பெற்றது காளையார் கோவில். இது மதுரையிலிருந்து (கொண்டிக் குச் செல்லும் வழியில்) 61 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது மாணிக்கவாசகர் திருவாதவூரி லிருந்து திருப்பெருந்துறைக்கு இவ்வழியே சென்ற தாகக் கருதப்படுகிறது நாட்டரசன் கோட்டை இரயில் நிலையத்திலிருந்து இவ்வூர் 10 கி.மீ. தொலைவு.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/325
Appearance