உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.பி. முதலாம் 324 நூற்றாண்டில் இவ்வூருக்குக் கானப்பேர் என்ற பெயர் நிலவிவந்தது. கானாடுகாத் தான் வரை பரவியிருந்த கான நாட்டின் தலைநகராக இது இருந்தது. சிங்களப் படையைப் புற முதுகிடச் செய்த வேங்கை மார்பன் இங்கிருந்து ஆட்சி செய்து வந்தான். அந்த அரசனை வென்று வாகைசூடியதால் உக்கிரப் பெருவழுதி என்ற பாண்டிய மன்னன் கானப்பேர் கடந்த உக்கிரப் பெருவழுதி என்று புற நானூறு முதலிய சங்க இலக்கியங்களில் சிறப்பிக்கப்படு கிறான். . கான நாட்டின் தலைநகர் காளையார் கோவில். எல்லைகள்-கானநாடு காத்தான் (கானாடுகாத்தான்), திருச்சுழி, நயினார் கோவில், திருப்பத்தூர். எல்லை வீரர்களில் வில்லும் அம்பும் வைத்துக் காவல் காத்தவர் களே இன்னும் வில்லம்பர் என்ற பெயரில் திருச்சுழியி லும் வல்லம்பர் என்ற பெயரில் பள்ளத்தூர்ப் பகுதி யிலும் உள்ளனர். நயினார் கோவிலிலும் திருப்பத்தூரி லும் எல்லைவீரர்கள் மற்போரிலும் கல்லடியிலும் வீரர் களாக இருந்தனர் என்பர். இவ்வூரில் பண்டைக் காலத்தில் பாண்டியன் கோட்டை என்று பெயர் பெற்று ஒரு கோட்டை இருந்தது. இதன் அகழியும் மதிலும் அழிந்துவிட்டன. சதுரவடி வாகவும், சில இடங்களில் 25 அடி உயரமுள்ள மண் மதில்களுடனும் இக்கோட்டையின் இடிபாடுகள் இன்று காட்சி தருகின்றன. வீர பாண்டியக் கட்டப் பொம்மன் இக்கோட்டையில்தான் தங்கி ஆங்கிலேய ரோடு போர் தொடுத்தான் என்பர்.

சிறப்பு : மூன்று சிவன் கோவில்கள், அடுத்தடுத்து அமைந்திருப்பது இவ்வூரின் சிறப்பு. இவற்றுள் பழமை யானது சம்பந்தர், சுந்தரர் இருவரது தேவாரமும்