329 கோவில் வாயிலில் மிகப்பெரிய காலி இடம் உளது. ராஜகோபுரத்தின் உயரத்தை உணர்த்தவும், கூட்டங் கள் நடத்தவும் இது பயன்படுகிறது. காளீசர் சந்நிதி யின் எதிரில் மருதுபாண்டியன் தெருக்கோடியில் பாண்டியனுடைய சமாதிக் கோவில் உளது. அவரது இறுதி விருப்பப்படியே ஆங்கிலேயர் இதை அமைத்ததாகக் கூறுவர். மருது காளீசர் பெயரால் கோவையில் ஏற்பட்ட பஞ்சாலை, தமிழ் நாட்டில் இந்தியர்களால் கட்டப்பட்ட முதல் பஞ்சாலை ஆகும். அதன் கிளை நூலாலை, இவ்வூரில் அமைக்கப்பட்டுளது. கான நாட்டின் தலைநகராய் இருந்த இவ்வூரில் இன்றைய ஆட்சியின் சின்னமாக ஊராட்சி மன்ற ஒன்றிய அலுவலகம் உளது. தொண்டிச் சாலை அருகே குளத்தின் வடகரையில் பாண்டியன் கோட்டை என்னும் இடம் உளது. இங்குத் தான் பாண்டிய மன்னர்களது நாணயச் சாலை இருந்தது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. . இத்தலத்திற்கு வருபவர்கள் இங்கே தங்கி, அருகே யுள்ள கொல்லங்குடி (5.கி.மீ). வெற்றியூர் (10.கி.மீ.) திருவேம்பகத்து ஆகிய தலங்களுக்கும் செல்லலாம். திருவாடானை (33.கி.மீ.) தொண்டி (46.கி.மீ). மானாமதுரை, இங்கிருந்து முடிக்கரைப் பாதை யாக 13 மைல் (20 கி.மீ.) இது காட்டுப் பாதையாக உளது. மருதசரர் காலத்தில் இருந்த இச்சாலை மீண்டும் போடப்பட வேண்டும். இங்கு ஒரு சித்தாந்த மடம் இருந்தது. யாழ்ப் பாணம் ஆறுமுக நாவலரின் உறவினர் ஒருவர் இம்மடத் தில் தங்கி, வகுப்புகள் நடத்தி வந்தார். இ.21
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/331
Appearance