உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

830 ம் வேதாந்த மடம் ஒன்று உளது. இது 1885 அளவில் தோன்றியது. கோவிலூர்ப் பரம்பரையினர் இம் மடத்தில் பட்டத்திற்கு வருவது மரபு. தலைமையிடம் யானை மடுவின் தென்கரையில் உளது. இங்கு நூல் நிலைய மும் செல்லப்பசுவாமிகள், ஜமீன்தார் சுவாமிகள் சமாதிகளும் உள்ளன. காளீசர் முதலிய கோயில்களில் திருவிழாக்களில் பல மண்டகப்படிகள் இந்த ஆதீனத் தார் செலவில் நிகழ்கின்றன. துறவிகள் பலர் இம் மடத்தில் உள்ளனர். இதன் கிளைமடங்கள் மதுரையிலும் புதுவயல் அருகே யுள்ள சாக்கோட்டையிலும் உள்ளன. மதுரைக் கிளைமடம் தெற்கு வெளிவீதியில் உளது. இது குட்டைய சுவாமிகள் மடம் என வழங்குகிறது. சிவரகசியம் பற்றிக் கோவிலூரித் துறவிகள் ஆராய்ச்சி நடத்திய போது வேம்பத்தூர்ப் பிச்சுவைய ரிடம் கிடைத்த ஏட்டுச் சுவடியின் அடிப்படையில் 25 மூர்த்திகளையும் வைத்துச் சிற்பம் செய்ய முடிவு செய் தனர். மீனாட்சியம்மன் கோவில் சுவாமி மண்டபத்தில் எட்டுத் தூண்களில் தூணுக்கு மூன்று ஆக 24 மூர்த்தி களையும் ஈசானிய பக்கம் கீழ்பக்கம் தூணில் ஏகபாத மூர்த்தியும் செதுக்கப் பெற்றன. இவ்வாறு செதுக் கப்பெற்றுள்ள இடம் நந்தி மண்டபம் ஆகும். மீனாட்சி யம்மன் கோயில் திருப்பணி வேலைகளிலும் மேற்கண்ட மூர்த்திகளைச் செதுக்குவதற்குமாக குட்டைய சுவாமி கள் அரிதின் முயன்று பல மடங்களிலிருந்தும் மைசூர் மாமன்னரிடமிருந்தும் நகரத்தார் பலரிடமிருந்தும் பெரும் பொருள் திரட்டினார். மேலும் பணம் போதா திருந்தமையால் பர்மா நாடெங்குமிருந்த நகரத்தார் கள் ஒரு மாதச் சம்பளம் சேகரித்து 1,40,000 ரூபாய் வழங்கினர்.