உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

331 இந்த நூற்றாண்டில் தேவகோட்டை நகரத்தார்கள் இங்குள்ள கோயில்களைப் புதுப்பித்தும் தேவாரமடம்; சித்தாந்த மடம், பன்னீர்மடம், விபூதி மடம் முதலி யன அமைத்தும் பணத்தை வாரி வழங்கியுள்ளனர். கோவிலுக்கு எதிரில், பெரிய மருது விரும்பியவாறு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படு கிறது. திருப்பத்தூர் மிசன் மருத்துவமனையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டதாகவும் கூறுவர். இரண் டுமே நம்பத்தக்கன. இந்நாளில் காந்தியடிகள் அஸ்தி யமுனைக்கரையிலும் கன்னியாகுமரியிலும் பிற இடங் களிலும் கரைக்கப்பட்டு ஆங்காங்கு நினைவுமண்டபங்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன அல்லவா? . முஸ்லிம் படையெடுப்பின்போது, திருவரங்கத்தி விருந்து இறையுருவங்கள், காளையார் கோவிலில் கொண்டு வந்து வைத்துப் பாதுகாக்கப்பட்டதாகவும், குறிப்புக்கள் உள்ளன. இந்நாளில் இசைப்புலவர் பலர் காளையார் கோவிலில் தோன்றியிருக்கின்றனர். காளையார் கோவிலில் இருப்பவை: வேதபாடசாலை.ஆகமப் பாடசாலை, தேவாரப்பாடசாலை, வேதாந்தமடம், நந்த வனம், அன்னச்சத்திரம், பசுமடம், குருபூசைமடம், திரு நீறுமடம், சந்தனமடம், பன்னீர்மடம், திருநடனமடம், நகரத்தார் விடுதி, சருவேசுவரர் ஆலயம், கங்கேசுவரர் ஆலயம், ருத்திரஜெப பிரமாலயம், பெருமாள்கோவில். சொக்கட்டான் காய்ச்சாரி மண்டபம். இலக்கியங்கள்: அப்பர் சுவாமிகளின் தனிப்பதிகம் இல்லாவிடினும் அவர் பாடல்கள் ஒன்பதில் இத்தலம் குறிக்கப்படுகிறது. சேக்கிழார், அருணகிரியார், குமர