உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 களவழிநாடு என்று இப்பகுதி பெயர் பெற்றிருந் தது. போர்க்களம் பல் கண்ட மறவர் வாழும் நாடு அன்றோ? (களவழி நாற்பது) பாடும் களமும் பாண்டியர் முடிசூடும் அரண்மனையும் இருந்தமையால் இவ்வூர் முடிகொண்ட பாண்டியர்புரம் என்று பெயர் பெற்றிருந் கருதப்படுகிறது. களவழி நாடாள்வான் " கல்வெட்டுச் ததாயும் கண்ணன் கூத்தன் என்ற சொற் றொடர்க்கு ஏற்ப, இவ்வூர்த் திருவிழாக்களில் கள்ளர் வகுப்பினர்க்கு 'நாட்டரசன்' என்ற சொற்றொடரின் காரணம்கூறித் திருநீறு வழங்கப்படுகிறது. நாட்டரசன் என்ற குடும்பம் இன்றும் உளது. பல ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் களியாட்ட விழாவில் இக்குடும்பத் தார்க்குச் சிறப்பான பங்கு இருந்து வருகிறது. கவியரசனான கம்பன் நாட்டரசன் கோட்டையில் இறுதிநாளில் வாழ்ந்து இங்கேயே உயிர்நீத்தார் என்பது அறிஞர் முடிவு. கம்பன்சமாதி (கமபன் கோவில் என்றும் இதைக் கூறுவர்) முன்பு, ஆண்டு தோறும் கம்பன் இராமாயணத்தை அரங்கேற்றிய பங்குனி ஹஸ்த நாளில் கம்பன்விழா இங்கு கொண்டாடப் பெறுகிறது. கம்பனைப்பற்றிய நடுகல், கம்பன்செய்,கம்பன்குளம், கம்பன் ஊருணி ஆகியவை இங்கு உள்ளன. . 1 காசியில் துர்கா மந்திர் அருகே ஸ்ரீ சத்திய நாராயண் துளசிமானஸ் மந்திர்' என்ற கோவிலில் துளசிதாஸ் இராமாயணம் முழுவதும் சலவைக்கல்லில் பொறிக்கப் பெற்றிருக்கிறது. கம்பர் காவியத்தின் உயிர்நாடியான பாடல்களையேனும் வ்வாறு நாட்டரசன் கோட்டையில் பொறிக்க முயலலாம். கண்ணகியை இப்பகுதியினர் கண்ணம்மை; கண்ணாத்தாள் என்ற பெயர்களில் குறிப்பிடுகிறார்கள்.