334 நாட்டரசன் கோட்டையில் கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் என்ற பெயருடன் கண்ணகிக்கு கோவில் கட்டப்பட்டிருக்கிறது. இப்பகுதியினர் அனைவரும் அவ்வம்மனைத் தம் குலதெய்வமாகக் கருதிப் பயபக்தி யுடன் வழிபட்டுவருகின்றனர். சிலப்பதிகாரத்தில் சதுக்கபூதங்கள் பற்றிய குறிப்புக் கள் இருப்பதற்கேற்ப இவ்வூரில் பூதகுடித்தெருஇருப்பது குறிப்பிடத்தக்கது. எகிப்தின் தலைநகரான கெய்ரோவில் 100க்கு 50 பேருக்காவது அப்துல்லா என்ற பெயர் இருக்கும்; அதுபோல இவ்வூரில் ஆடவரில் கண்ணப்பன், பெண்டிரில் கண்ணாத்தாள் என்ற ற பெயர்கள் பரவி யுள்ளன. ஒரு வீதியில் நின்றுகொண்டு கண்ணப்பன் என்று கூப்பிட்டால் நான்கு பேராவது திரும்பிப் பார்ப் பார்கள். ஆடி, தை மாத வெள்ளிக்கிழமைகளில் கண்ணாத தாள் கோவிலில் கூட்டம் மிகுதி. கண்ணாத்தாள் கோவிலில் முதல் மரியாதை நகரத் தார்க்கு. சிவகங்கை மன்னருக்கு, அடுத்த மரியாதை தான். திருப்பணி வேலைக்கு (பூங்குடியிலிருந்து 8 கி.மீ. தொலைவிலுள்ள) திருமலையிலிருந்து கல் ஏற்றிவரச் நாட்டரசன் கோட்டை நகரத்தார் அனைவரும் சோற்று மூட்டை கட்டிக்கொண்டு மூன்று நாள் இருந்தனர். சில கற்களும் தூண்களும் கயிற்றால் கட்டி இழுத்தும் அசையவில்லை. அப்போது, வேம்பத்தூர் புலி பிச்சுவையர், சாக்கிரத்தும் சொப்பனத்தும் தாழும் சீக்கிரத்துன் ஆலயம்போய்ச் சேர்" சிலேடைப் அடியார் காணச் என்று பாட, கற்கள் அசைந்தன என்பர்.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/336
Appearance