உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

841 ஒன்றியத்து வட எல்லையிலுள்ள சிலைமானில் ஒரு பகுதி (மணலூர்) இராமநாதபுர மாவட்டத்திலும் ம் பிறிதொரு பகுதி மதுரை மாவட்டத்திலும் உளது. இங்கு ஒரு நூலாலை இயங்கிவருகிறது. ஏந்தல் என்ற இறுதிச் சொல்லுடைய பல இடங்கள் இவ்வொன்றியத்தில் காணப்படுகின்றன. சான்று: லாடனேந்தல், மழவராய னேந்தல்,பெத்தனேந்தல், செம்பராய நேந்தல், தவத்தாரேந்தல், வீரனேந்தல். திருப்பூவணம்: (ம.தொ. 10,229) வைகையின் தென்கரையில், மதுரையிலிருந்து 19 கி.மீ. தொலைவில் அமைந்த சிறு நகர். மூவர் தேவார மும் பெற்ற சிவதலம். இங்கிருந்து தென்மேற்கே 29 கி.மீ. தொலைவில் மானாமதுரை உளது. பாண்டியர் தலைநகரான மதுரையிலிருந்து துறைமுக நகரான தொண்டிக்குச் செல்லும் வழியிலிருப்பதால் இந்நகர் தொன்று தொட்டே புகழ் பெற்றிருந்தது. இங்கிருந்து வடக்கே திருவாதவூர் வழியாக மேலூர் 26 கி.மீ. தொலைவிலும், தெற்கே முக்குளம், நரிக்குடி வழியாக அருப்புக்கோட்டை 40 கி. மீ. தொலைவிலும் உள்ளன.

இவ்வூர்ப்பெயர் பலவாறாகத் தவறாக எழுதப்பட்டு வருகிறது. தவறான பெயர்களுக்கு நாமும் விளம்பரம் தர விரும்பவில்லை. மூவர் தேவாரத்திலும் கல்வெட்டி லும் குறிப்பிடப்பெற்றுள்ளவாறு திருப்பூவணம் என்று எழுதுவதே பொருந்தும். கோட்டை, நெல்முடிகரை, பழையூர், புதூர் என்ற நான்கு சிற்றூர்களை இவ்வூர் உடையது. புதூர் மட்டும் பிரமனூர்க் கால்வாய்க்கு மறுபுறம் அமைந்திருக்கிறது. கோட்டை என்னும் பகுதி பாண்டியர் கோட்டைகளுள்