342 ஒன்றாக இருந்தது.இப்பகுதியிலேயே திருப்பூவண நாதர் கோவில் திகழ்கிறது. நெல் முடிக்கரை என்னும் பகுதி திருப்பூவணம் இரயில் நிலையத்தைச் சூழ்ந்தது. பாண்டிய அரசர்க்குத் திருப்பூவண மக்கள் நெல்லால் கோட்டை கட்டி, கதிரை எடுத்து முடிசூட்டி வந்தனர். அதனால் இவ் விடம் இப்பெயர் பெற்றது. நெல்லால் கோட்டை கட்டுவரா? நெற் கதிரால் முடிசூட்டுவரா? என்ற வினாக் களை எழுப்புபவர்க்கு இந்நாளில் அமைச்சர் அல்லது வெளிநாட்டு அரசின் தலைவர் ஏலக்காய்த் தோட்டத் துக்குச் செல்லும்போது அவர்க்கு ஏலக்காய் மாலை போடப்படுவதை நினைவூட்டுக. பாண்டி நாட்டுப் பதினான்கு தலங்களிலும் மூவர் பாடலும் பெற்றது திருப்பூவணம் மட்டுமேயாகும். இக்கோவிலில் உள்ள இறைவர்க்குத் திருப்பூவணநாதர் திருப்பூவணேசர், அடைவார் வினை தீர்ப்பவர் என்ற பெயர்களும், இறைவிக்கு அன்னபூரணி, அழகிய நாயகி, மின்னனையாள் என்ற பெயர்களும் வழங்கிவருகின்றன. கற்பக விநாயகர். மணிமந்திர விநாயகர், ஒட்டுக்கல் வெள்ளை விநாயகர் என்ற மூன்று விநாயகர் திருவுருவங் கள் காணப்படுகின்றன. திருநந்தித் தேவர் திருவுருவம் சிறிது சாய்ந்திருக்கிறது. ஆடிப்பூரமும் பங்குனி உத்தரமும் இங்கு கொண் டாடப்படுகின்றன. ஐப்பசி மாதத்தில் நிகழும் பத்து நாள் விழாவில் அம்பாள் கோலாட்டம் போடுவது கண்ணுக்கினிய காட்சியாகும். இக் கோவிலில் உள்ள உற்சவர் உருவங்கள் பத்தரை மாற்றுத் தங்கத்தால் ஆகியவை. இறைவனின் அழகைக் கண்டு வியந்து, பொன் அணையாள் என்ற தாசி, திருப்பூவணநாதர் விக்கிர
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/344
Appearance