உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

351 விதைத்த நெல் முளைகளை வாரிவரச் செய்தார். இவர் பிறந்த பதியே இது. இளையான்குடி என்ற பெயருடைய ஊர்கள்: (1) காரைக்கால் பகுதி (2) செங்கற்பட்டு மாவட்டம் (3) திருநெல்வேலி மாவட்டம் ஆகியவற் றிலும் உள்ளன. ஆனால் இவ்வூரே, இந்த நாயன்மாரின் பதி என்பதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன: . (1) மாறநாயனாரின் திருக்குடிசை, அடியார் வீட்டுத்தோப்பு, அடியார்க்கு அமுதளித்த 'முளைவாரி அமுதளித்த நாற்றங்கால் என்ற நிலம், கீரை பறித்த கொல்லை ஆகியவை உள்ளன: - (2) மாறன் என்னுஞ் சொல் பாண்டியரைக் குறிக்கும். இந்நாயனார் பாண்டியச் சிற்றரசருள் ஒருவ ராக இருந்திருக்கக்கூடும். (3) முளைவாரியமுதளித்த விழா இவ்வூர்ச்சிவன் கோவிலில், நாயனார் திருநட்சத்திரமான ஆவணி மகத் திவ் கொண்டாடப்பெறுகிறது. (4) இவ்வூர் ஆயிரவைசியர், மாறநாயனார்புகழைப் பரப்பி வருகின்றனர். சாலைக்கிராமம்: கத்தோலிக்கர் 5,000பேர் இப்பகுதி யில் உள்ளனர். வேணாடன் என்ற பெரிய பிரபு இவ்வூரை நிறுவிய தாகக் கூறுவர். இவனைப் புகழ்ந்து விக்கிரமசோழன் உலாவில் பாடல்கள் உள. இவ்வூரருகே பரத்தைவயல் என்று ஓர் ஊர் உளது. போகளூர் ஊராட்சி ஒன்றியம் நயினார் கோவில் ஊராட்சி ஒன்றியம் போகளூர் ஒன்றியம், (1) போகளூர் (2) நயினார் இரு ஒன்றியங்களாகப் ரு கோவில் என்று பிரிக்கப் பெற்றிருக்கிறது. இரண்டும் ஓரளவு வளமானவை.