என்று 352 போகளூர்: சத்திரக்குடி என மக்கள் நாவில் வழங்குகிறது. அரசினர் கணக்குகளில் போகளூர் குறிப்பிடப் படுகிறது. பரமக்குடியிலிருந்து (இராமநாதபுரம் சாலையில்) 21 கி. மீ., பஸ், இரயில் வசதிகள் உடையது. இங்கிருந்து 13 கி.மீ. தொலை வில் வைகை ஆறும், 16 கி.மீ. தொலைவில் இராமநாத புரமும் உள்ளன. சேதுபதிகளின் உறவினர் இப்பகுதியில் பல இடங் களில் வாழ்கின்றனர். அக்குடும்பத்துப் பெண்களுக்கு நாச்சியார் என்று பெயர். உத்தரகோசமங்கையில் கோவில் கொண்டிருக்கும் அம்மன் இங்கு முக்காணிப் பிராமணர் குடும்பத்தில் பிறந்ததாக ஐதீகம். எனவே திருச்செந்தூரிலிருந்து முக்காணியர், அம்பிகையின் திருக்கல்யாண உற்சவத் துக்கு ஆண்டுதோறும் உத்தரகோச மங்கைக்கு வந்து, ஏழாம் திருநாளில் தங்கள் வீட்டுத் திருமணம் முதலிய சடங்குகளைச் சத்திரக்குடியில் நடத்துகிறார்கள். காமன்கோட்டை பாண்டிக் கண்மாய் இரயில் நிலையத்திலிருந்து 8கி.மீ.தொலைவிலுள்ளது. மஞ்சக் கொல்லையிலிருந்து வடக்கே வரும் வைகை வாய்க்காலால் வளம்பெற்று நெல் விளைகிறது. மாவட்டக் கழகத்தார் உயர்நிலைப்பள்ளி தொடங்க முன்னேற்பாடு செய்த இவ்வூர்ப் பள்ளிக்குழுவினர் ஆசிரியர்கள் அனைவர்க்கும் வீடுகட்டி வாடகைக்குக் கொடுத்து வருவது பாராட்டுக்குரியது. நயினார் கோவில்: சேதுபதியின் குலதெய்வமான நாகநாதர் கோவில் உள்ள இவ்வூர் இராமநாதபுரத்தி லிருந்து 25 கி.மீ. தொலைவிலும், பரமக்குடியிலிருந்து
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/354
Appearance