உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 இவ்வாறு மாநிலமெங்கும் ஒரு திட்டத்தை அறிவித் தால், அரசினருக்குச் செலவில்லாமல் புதிய சாலைகள் ஏற்படும். கல்வித் துறையில், கிறித்தவர்கள் வாழும் பகுதி கள் மட்டுமே முன்னேறியுள. இவ்வட்டம் தேவகோட்டை நகராண்மைக் கழக மும் திருவாடானை, இராஜசிங்கமங்கலம், கண்ணங்குடி, தேவகோட்டை என்ற நான்கு ஊராட்சி ஒன்றியங்களும் டையது. தேவகோட்டையில் கோட்ட ஆட்சியாளர் அலு வலகமும், துணை வட்டத் தலைவராகிய டிப்டி தாசில்தார் அலுவலகமும் உள்ளன. தேவகோட்டை நகராண்மைக் கழகம்: காரைக்குடியில் இரயில் நிலையம் ஏற்படுவதற்கு முன்வரை, இராமநாதபுர மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் தேவகோட்டையே பெரு நகரமாக விளங் கிற்று. 1911-ஆம் ஆண்டில் அறந்தாங்கியிலிருந்து தேவகோட்டை வழியாக இராமநாதபுரத்துக்கு இரயில் பாதை போடவும் முடிவாகியிருந்தது. 1914-இல் உலகப் போர் ஏற்பட்டு 1923 வரை, புதிய இரயில் பாதை எதுவும் போடப்படவில்லை. அந்தச் சூழ்நிலையில் ராஜா சர். அண்ணாமலை செட்டியாரின் செல்வாக்கால், திருச்சி - செட்டிநாடு- சிவகங்கை மானாமதுரை இராமநாதபுரம் இரயில் பாதை திட்டமிடப்பட்டது. - தேவகோட்டை என்பது தேவர் கோட்டையைக் குறிக்கும் என்று சிலரும் தேவி கோட்டை என்பதன் மரூஉ என்று பிறரும் கூறுவர். கூறுவர். பிந்திய பிந்திய கூற்றுக்கு மாவட்டத்தில் காவிரிப்பூம் ஆதரவாகத் தஞ்சை