357 பட்டினத்துக்கு அருகே தேவிகோட்டை என்று ஓர் ஊர் இருப்பதையும், பூம்புகாரிலிருந்து நகரத்தார்கள் தேவ கோட்டைக்குக் குடி வந்ததையும் சுட்டிக்காட்டுவர். தேவகோட்டை நகரில் குறிப்பிடத்தக்க இனம் நகரத்தார் இனம், பிற எந்த ஊரிலும்விட இங்கேதான் மிகுதியாக வாழ்கின்றனர். பிற ஊராரைவிட, தேவ கோட்டை நகரத்தார் சமயப் பற்று மிக்கவர்கள். தமிழ் நாட்டில் பல கோவில்களைப் புதுப்பித்த பெருமை இவர் களையே சேரும். ராஜாசர் அண்ணாமலைச் செட்டியார் காலத்துக்கு முன், இந்நகரினரான ஜமீன் தார் குடுமபம், மெ.நா.சித. குடும்பம், முத்து. கரு.குடும்பம், தி. ராம். தி. குடும்பம்,ராம. அரு.அரு. குடும்பம் ஆகியவை பெரும்புகழ் பெற்றிருந்தன. தேவகோட்டை ஜமீன் தார்கள் இராமநாதபுரம் ஜமீனையும் மேற்பார்த்து வந்தனர்; இராமேசுவரம் கோவில் திருப்பணியில் இவர்கள் பங்கு பெரிது; அங்கு பரம்பரை டிரஸ்டிகளாகி இருந்து வருகிறார்கள். சிவ ஆகம் பரிபாலனசபை, சேக்கிழார் கழகம், கந்தர் சஷ்டி விழாக் கழகம் ஆகியவை இந்நகரில் சிறப் பாக இயங்கி ஆத்திகத்தை வளர்க்கின்றன. சேக்கிழார் திருவிழா நடப்பதற்கு ஒரு வரலாறு உண்டு. இவ்வூர் வன்றொண்டர், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் பயின்று பெரிய புராணத் தில் ஈடுபட்டு சேக்கிழாருக்குக் கோவில் கட்ட விரும் பினார். அதற்காக ஒரு இடம் வாங்கினார். குன்றத்தூரி லிருந்து கல் கொண்டுவந்து சேக்கிழார் திருவுருவம் சமைத்தார். சேக்கிழார் கோவில் கட்டுவதாக இருந்த இடத்திலேயே நகரச் சிவன் கோவில் ஏற்பட்டது. இதனால் கருவறையிலேயே சேக்கிழாருக்கு உட்கோவில் கட்டப்பெற்றது.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/359
Appearance