366 மும் (139அடி) அனைவரையும் ஈர்க்கின்றன. கோவில் உள்ள பகுதிக்குப் பிடாரனேந்தல் என்று பெயர். இக்கோவிலில் சொற்கேட்டான் சாரி (எதிரொலிக் கும்) மண்டபம் உள்ளது. சொக்கட்டான்போல நான்கு வாயில்களுடன் அமைக்கப்படுவதால் சொக்கட் டான் மண்டபம் எனச் சொல்லப்படுகிறது. சூரியனுக் குத் தனிச்சந்நிதியும் சூரிய சண்டிகேசுவரர் சந்நிதியும் ண்டு. சூரியனும் அகத்தியரும் வழிபட்ட தலம். சூரிய தீர்த்தம் சிறப்புடையது. விழாக்கள் - வைகாசி விசாகம். ஆடித் திருக்கல்யாணம். 160 முதல் 1650 வரை, இது சேதுபதிகளின் தலைநக ராக இருந்ததாக, நெல்சன் ரோமாபுரிக்கு எழுதிய ஒரு கடிதத்திலிருந்து தெரிகிறது. இவ்வூரில் இசையறிவு மிக்கார் பலர் இருக்கிறார்கள். அஞ்சுகோட்டை: இவ்வூர் அம்பலகாரர் இரட்டை மரியாதை உண்டு. . களுக்கு நம்புதழை: தொண்டிக்கு 2 கி. மீ. தெற்கேயுள்ளது. பெரிய படகுகள் ஒட்டியும் தென்னை பயிரிட்டும் இவ்வூர் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். சேதுபதியின் அமைச்ச ராக இருந்த தெய்வகன்னி என்பவர் இராமேசுவரம் யாத்ரீகர்க்கு சோமவார மடம் கட்டி. அதன் செலவுக்கு இவ்வூரைத் தானமாக அளித்துள்ளார். மாவூர்: தஞ்சை மாவட்டத்திலும் ஒரு மாவூர் இருக்கிறது. திருவெற்றியூர்: சென்னையருகே உள்ள திருவொற்றி யூர் பட்டினத்தாரால் புகழ்பெற்றது. இவ்வூருக்கும் பட்டினத்தார்க்கும் தொடர்பு உண்டா என்பது ஆராயத்தக்கது.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/368
Appearance