பாசும் பிரியாள் 867 கோவில்: திருவாடானையிலிருந்து 8கி.மீ. வெள்ளிக்கிழமையன்று தீர்த்தமாடி வழிபட் டால் பாம்புகடி, பூரான்கடி, வண்டுகடி முதலிய நச்சுக் கள் நீங்கும். உப்பூர்: திருவாடானையிலிருந்தும் தொண்டியிலிருந் தும் 16 கி.மீ. பழமையான விநாயகர் கோவிலுளது. இவ்வூரில் கடலில் நீராடி வெயிலுகந்த விநாயகரை வழிபட்டு, பிறகு தேவிபட்டினம் வழி இராமேசு வரத்தை அடைவது மரபு. வட்டாணம்: தொண்டியிலிருந்து வடக்கே 8கி.மீ. ராமநாதபுர மாவட்டத்தில் பெரிய உப்பளம் இங்கு இருக்கிறது. இராஜசிங்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம் இம்மாவட்டத்தின் வளமான ஒன்றியங்களுள் இது ஒன்று. இராஜசிங்கமங்கலம்: திரு வாடானை - இராமநாத புரம் சாலையில், இராமநாதபுரத்துக்கு வடக்கே இருபது மைல் தொலைவில் அமைந்த ஊர், ஒரு காலத்தில் இலங்கைப்படைகள் இவ்வூரைப் பிடித்திருந்தன. கைலாசநாத சுவாமி கோவிலும் கரியமாணிக்கப் பெருமாள் கோவிலும் மசூதிகளும் உள்ளன. இவ்வூருக்கு இப்போது பெருமை தருவது, இராஜ சிங்கமங்கலம் கண்மாய். வீராணம் ஏரிசுத அடுத்தபடி தமிழ்நாட்டின் பேரேரி இதுவே. வையை ஆற்றுநீர் அனைத்தும் இந்தக் கண்மாயில் விழுந்தபிற கடலில் போய்ச் சேருகிறது. சருகணி ஆற்றுநீருட ཀ༢; வந்து விழுகிறது. கண்மாய்க்கரையின் நீளம் 149ல் (23 கி.மீ.) இதன் உள்வாயில் அரியக்கொட்டான்,
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/369
Appearance