$69 படைக்கா கோட்டை என்னும் என்னும் ஊர்களும் உள்ளன மறவர் படை தங்கியதால் இப்பெயர்கள் ஏற்பட்டிருக் கக்கூடும். சித்தூர்வாடி: சித்தூர் ஆந்திர மாநிலத்திலும் வாடி மஹாராஷ்டிரத்திலும் உள்ளன! செவ்வாய்ப் பேட்டை: சேலத்தில் ஒரு செவ்வாய்ப் பேட்டை இருக்கிறது. சிவன் கோவிந்த மங்கலம்: இவ்வூரில் சிதைந்த கோவிலில் ஒரு கல்வெட்டில் இவ்வூருக்கு நாற்பத்தெண்ணா யிர நல்லூர் என்ற பெயர் குறிக்கப் பெற்றிருக்கிறது. ஆனந்தூர்ப் புலவர் சீ. இலட்சுமணன், கொங்கு என்னும் இதழில இதைக் குறித்துப் பின்வருமாறு எழுதியிருக் கிறார்: சமயத் தொண்டர்களை தொகைப் பெயரால் வழங் கும் பழக்கம் தமிழ் நாட்டில் எல்லாக் காலங்களிலும் இருந்து வந்துள்ளதை அறிவோம். தில்லை மூவாயிரவர், திருப்பெருந்துறை முன்னூற்றுவர், திருவாக்கூர் ஆயிர வர், திருவீழிமிழலை ஐந்நூற்றுவர் என்பன அதற்கான சான்றுகளாகும். நாலடியார் இயற்றிய சமணர் எண்ணாயிரவர் மதுரையில் வாழ்ந்ததாகவும் இலக்கியச் செய்திகள் கூறுகின்றன. லக்கியங்களில் அகச்சான்றுகளிலிருந்து, மதுரை யில் வாழ்ந்த சிவனடியார் என்பது தெளிவாகும், நாற்பத்தெண்ணாயிரவர் எனவே "நாற்பத்தெண்ணாயிர நல்லூர்" என்று கோவிந்த மங்கலம் அழைக்கப்பட்டது அவர்களை ஒட்டியதே ஆகலாம். மலரி: இராசசிங்கமங்கலத்துக்கு அருகு. ஒட்டக் கூத்தர் பிறந்த ஊர். இவ்வூர் காளிகோவில் புகழ்
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/371
Appearance