387 குடிக்கும் திருத்தருப்பூண்டிக்கும் இடையே ஒரு திருப் பத்தூர் உளது. தமிழ் நாடு சட்டசபையில் 'கனம் திருப்பத்தூர் உறுப்பினர்' என்று அவைத்தலைவர் சொன்னவுடன் இருவர் எழுந்து பேச முயன்றதால், வேறுபாட்டைத் தெரிவிக்க, இந்தத் தொகுதி திருக்கோட்டியூர்த் தொகுதி என்ற பெயரால் 1957 முதல் 1967 வரை வழங்கி வந்தது. மன்ற பாடல் பெற்ற சிவன் கோவிலில் உள்ள இறைவன் பெயர் திருத்தளிநாதர், இறைவி சிவகாமி அம்மை. இவ்விறைவன் பெயரால் ஏற்பட்ட திருத்தளிநாத பட்டி என்று ஊர். வாணியங்காடு ஊராட்சி எல்லையுள் உளது. திருப்பத்தூரில் சித்திரை மாதத்தில் முதல் வெள்ளிக்கிழமையில் வயிரவர்க்கு நடைபெறும் திருவிழாவும் வைகாசிவிசாக விழாவும் காணத்தக்கவை. கோவிலின் வடக்குச் சுற்றில் மேற்கு நோக்கி அமைந் துள்ள வயிரவர் சந்நிதி சிறப்பாக விளங்குகிறது. மதுரை மொட்டைக் கோபுர முனீசுவரரும் திருப் பத்தூரிலிருப்பது போன்று யோக வயிரவரே. திருப் பத்தூரில் வயிரவருக்குச் சிறப்பாக வழிபாடு நடக் கிறது. இத்தலத்தைப் பற்றித் திருஞான சம்பந்தர் பதினொரு பாடல்களுள்ள ஒரு பதிகமும், திருநாவுக் கரசர் பத்துத் திருத்தாண்டகச் செய்யுட்களுள்ள ஒரு பதிகமும் பாடியுள்ளனர். இக்கோவில் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தாரின் ஆளுகைக்கு உட் பட்டது. இரத்தினசபை என்று குறிப்பிடப்படுவது திருவாலங்காடு எனப் பலர் கருதுகின்றனர். இது
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/389
Appearance