388 தவறு. இரத்தினசபை இத்தலமே என்பது அறிஞர் முடிவு. பாண்டிநாட்டுத் திருப்புத்தூர்ச் சிற்சபையில் சிவபெருமான் கௌரி தாண்டவம் ஆடினார் என்று ஆராய்ச்சிப் பேரறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி. எழுவகைத் தாண்டவம்' என்ற நூலில் எழுதி யுள்ளார்.திருப்பத்தூர்த் தலபுராணம் (கெளரி தாண்ட வச் சருக்கம்) இக்கருத்தை வலியுறுத்துகிறது. திருமுறை ஆசிரியர்களின் படைப்புக்களில் சங்கத் தைப் பற்றிய முதற்குறிப்பு, திருப்பத்தூர்த் தேவாரத் தில்தான் காணப்படுகிறது. திருத்தளிநாதர் கோவிலில் வால்மீகியின் உருவம் உளது. திருப்பத்தூர்க் கல் வெட்டில் 'ஓங்கு கோவில் புராணம்' என்ற ஒரு புராணம் இத்தலத்தைப் பற்றி இருந்ததாகக் குறிப்பிடப் படுகிறது. சுந்தரர் பெயரால் 'திருத்தொண்டர் தொகை யான் மடம்' என்ற ஒரு மடம் இக்கோவிலுக்குள்ளேயே இருந்ததாகவும் அறிகிறோம். கோவிலுக்கு அருகே சீதளி என்ற பெரிய தெப்பக் குளம் இருக்கிறது. அரசியல் வரலாற்றிலும் வரலாற்றிலும் இவ்வூருக்கு முக்கியத் துவம் உண்டு. முதல் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1216-1238) காலத்திய நிகழ்ச்சிகளைத் திருப்பத்தூர்க் கல்வெட்டுக்களால் அறிய முடிகிறது. 18-ஆம் நூற் றாண்டின் இறுதியில் சிவகங்கைச் சீமையில் உரிமைக் குரல் எழுப்பிய மாவீரனாகிய மருது பாண்டியனுக்கும் (பெரிய மருது) இவ்வூர்க்கும் பல தொடர்புகள் உண்டு. அவரால் உழவர்க்கெனக் கட்டப் பெற்ற பெரிய கேணி கள் இவ்வூரைச் சுற்றிலும் உள்ளன. இவற்றுக்குக் பதிப்பாசிரியர் K. அண்ணாமலை, மயிலாப்பூர்.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/390
Appearance