உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

389 காராளன் கேணி' என்று பெயர் (காராளன்- உழவன்.) இவ்வூரில் மருதுபாண்டியன் கட்டிய கோட்டை அழிந்துவிட்டது. கோட்டைக்கு வெளியே 'அகில்' என்னும் குட்டை குளங்களையும் மனைத்தெருவையும் இன்னும் உள்ள அகில் காணலாம். மருது அம்மாவீரனின் பாண்டியன் தூக்கிலிடப்பட்டதும் உடல் புதைக்கப் பெற்றிருப்பதும் இவ்வூரிலேயே. இவர்சமாதி சுவீடிஷ் மிசன் மருத்துவ மனைக்குள் இருக்கிறது. இச்சமாதியை மக்கள் மறக்கச் செய் வதற்காக இதைச் சுற்றிய பரந்த இடத்தையும் தோப்பையும் சிவகங்கை அரசர் சுவீடிஷ் மருத்துவ மனைக்கு வழங்கினார் என்பர். வாணிகத்துறையில் திருப்பத்தூரின் பெருமை 1930-இல் காரைக்குடிக்கு இரயில் வசதி ஏற்பட்டபின் குன்றிவிட்டது. எனினும் செட்டிநாட்டு ஊர்கள் சூழ இருப்பதால் ஓரளவு வாணிகம் நடைபெறுகிறது. குன்றக்குடி, பிள்ளையார் பட்டி, திருக்கோட்டியூர். பிரான்மலை ஆகிய தலங்களும் இவ்வூரைச் சுற்றுயுள்ளன. இங்கிருந்து பல திக்குகளில் நெடுஞ்சாலைகள் செல்லு கின்றன. மதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக் கோட்டை, பொன்னமராவதி,திண்டுக்கல் ஆகிய நகரங் களுக்குச் செல்லும் சாலைகள் குறிப்பிடத்தக்கன. சனிக் கிழமைகளில் சந்தை கூடுகிறது. ஒரு மசூதியும், கத்தோலிக்கர் தேவாலயமும், தென் இந்தியத் திருச்சபையின் ஆரோக்கியமாதா ஆலயமும் இங்கு உள்ளன. பூமாரி அம்மன் பூச் சொரியல் விழா ஆண்டுதோறும் பெரிய அளவில் கலை நிகழ்ச்சிகளுடன் சித்திரைத் திங்களில் நடைபெறுகிறது.