உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400 ஆ. தெற்கூர் : ஆத்திக்காட்டுக்கு வடக்கேயும் ம் தெற்கேயும் உருவான ஊர்கள் வடக்கூர் தெற்கூர் என வழங்குகின்றன. இவ்வூரினரான தொழிலதிபர் கருமுத்து தியாகராசச் செட்டியார், தம் மனைவி பெயரால் விசா லாட்சி உயர்நிலைப்பள்ளி தொடங்கியுள்ளார். இதன் கவினுறு கட்டிடங்களை, 1959-இல் ஜவஹர்லால் நேரு திறந்து வைத்தார். விசாலாட்சி விசாலாட்சி - தியாகராசர் மகளிர் உயர்நிலைப்பள்ளி 1962 முதல் நடைபெற்று வருகிறது. மின்சாரக் கிளை நிலையம் ஒன்று இவ்வூரில் இருக்கிறது. - சட்ட அரசியல் கிளர்ச்சிகளாலும், 1971-இல் நடைபெற்ற பெரிய கொள்ளையாலும் இவ்வூரைப் பற்றிச் மன்றத்தில் பலமுறை விவாதம் நடைபெற்றிருக்கிறது. வஞ்சினிப்பட்டி: பழந்தமிழர்கள் வஞ்சி,தும்பை முதலிய பூக்களை அணிந்தனர். தும்பைப்பட்டி, மேலூர் அருகே உளது. திருக்கோட்டியூர்: நாலாயிரத் திவ்யப்பிரபந்தத்தில் திருப்பல்லாண் டுக்கு அடுத்து முதற் பாசுரமான "வண்ணமாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்" என்ற பாடல் இத்தலத்துப் பெருமானைப்போற்றும். இந்த வைணவத்தலம் திருப்ப தூர்க்குத் தென்மேற்கே 8 கி.மீ. தொலைவில் சிவகங்கைச் சாலையில் உளது. மக்கள் தொகை 2,500. 2 ஊர்ப்பெயருக்கு இரு காரணங்கள் கூறப்படு கின்றன. (1) கோவில் உள்ள ஊர் 'கோவிலூர்' என வழங்கும் வழக்குப் போன்று கோட்டம் (கோவில்) பெற்ற ஊர் கோட்டியூர் ஆயிற்று. (3) திருகு, திருக்கு என்றும் சொற்கள் மாறுபாடு என்னும் பொருளை உடையன. செய்த பாவம், செய்கின்ற பாவம் யாவும் இறையருளால் நீங்கும். எனவே இறைவன் 'திருக்கு