401 ஓட்டி ஆகிறார். திருக்கு ஓட்டி உள்ள ஊர் திருக் கோட்டியூர். இங்குள்ள மாதவன் கோவில் அமைப்பா லும் வரலாற்றாலும் மங்கள சாசனம் பெற்றமையாலும் இலக்கியங்களாலும் சிறப்புடையது. இராமானுஜர் தொடர்பாலும் அமைப்பு: கருவறை மீதுள்ள அஷ்டாங்க விமானம் தஞ்சைப் பெரிய கோவிலைப் போன்றது. இதன் நிழலும் ஒருபோதும் தரையில் விழுவதில்லை. மூலத்தானத்தி லுள்ள திருமால் உருவத்தை வழிபட, சிவபெருமான் சந்நிதி வாயிலாகவே செல்லவேண்டும். வரலாறு: கிருஷ்ண பகவான் இத்தலத்தில் பிறந் தார் என்பர் பெரியாழ்வார். கள் ஸ்ரீ பெரும்பூதூரில் பிறந்து இன்றளவும் அறிஞர் மெச்சும் தத்துவஞானியான இராமாநுஜர் வாழ்க்கையுடன் இணைந்து திருக்கோட்டியூரும் பாராட்டப்பெற்று விளங்குகிறது. இராமாநுஜர் திருவ ரங்கத்தில் தங்கி, நூல்கள் எழுதிக் கொண்டிருந்த போது திருக்கோட்டியூர் நம்பியின் பெரும்புலமையைக் கேள்விப்பட்டு இங்கு வந்தார். நம்பி, ஆளவந்தார் என்ற வைணவ ஆசிரியரிடம் கல்வி பயின்றனர். வைணவமந்திரம் என்று சிறப்பாகக் குறிப்பிடப்படும் திருமந்திரத்தின் சீரிய பொருளை அவர் தம் ஆசிரியப் பெருந்தகையிடமிருந்து தெரிந்து கொண் டிருந்தார். அதை உணர்ந்து கொள்ள விரும்பி இராமாநுஜர் 18 முறை திருக்கோட்டியூருக்கு வந்து முயன்று இறுதியில் வெற்றி பெற்றார். வேறுயாருக்கும் இதைத் தெரிவிக்கக் கூடாது என்று சத்தியம் வாங்கிக் கொண்டு நம்பி, இந்த மந்திரத்தின் உட்பொருளை இராமாநுஜர்க்குக் காதோடு காதாகச் சொன்னார். .
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/403
Appearance