402 . மாத் வைணவ மந்திரத்தை அறிந்து தாம் திரம் பேரின்பம் அடைவதைவிட, மற்றவர்களுக்கும் மோட்ச மார்க்கத்தைக் காட்ட விரும்பினார். குருவின் சாபத்தால் தாம் நரகவேதனை அனுபவிக்கவும் இராமாநுஜர் உறுதி கொண்டார். எனவே மூடுமந்திர மாய் இருந்த வைணவத் திருமந்திரப் பொருளை, திருக்கோட்டியூர் மதில்மேல் ஏறி, எல்லோருக்கும் இராமாநுஜர் உபதேசித்தார். இவ்வாறு அவர் அருள் வழங்கியமையால் இத்தலம் 'திவ்ய தேசம்' ஆகக்கருதப் பெறுகிறது. அவர் உபதேசித்த இடத்தில் இராமா நுஜரின் திருவுருவத்தைக் காணலாம். நின்றும் இருந்தும் கிடந்தும் கூத்தாடியும் நடந்தும் சேவை சாதிக்கும் எம்பெருமான்களின் மூர்த்திகளை ஒருங்கே காணத்தக்க தலம் திருக்கோட்டியூர். அடித் தளத்தில் பள்ளிகொண்ட பெருமாள். (கிடந்த கோலம்) இரண்டாவது தளத்தில் சௌமிய நாராயணப் பெரு மாள் (நின்ற (நின்ற திருக்கோலம்). மூன்றாவது தலத்தில் வைகுண்டநாதன் (இருந்த திருக்கோலம்). மங்கள சாசனம்: திருமால் உறையும் பதிகளுள் கோட்டியூர் அரங்கம் மெய்யம்' என்று இத்தலத்தை நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் முதலில் வைத்துச் சிறப்பிக்கிறது. பெரியாழ்வார். பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார். திருமங்கையாழ் வார் ஆகிய ஐவரும் பாடிய 39 பாசுரங்கள் இத்தலத் துக்கு உண்டு. கோட்டியூர்க் கலம்பகம், பிள்ளைத்தமிழ் ஆகிய சிற்றிலக்கியங்களும் இத்தலத்தைச் சிறப்பிக் கின்றன. சங்ககாலப் புலவரான நல்லந்தையார் இவ்வூரினர். நற்றிணை இருபத்தோராம் பாடல் இவர் பாடியது.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/404
Appearance